இது பண்டிகை காலம். வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தீபாவளிக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைத்தெருக்களில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து கடைக்காரர்களும், பிராண்டுகளும் விளம்பரங்களில் மும்முரம் காட்டி வருகின்றனர். அப்படித்தான் Fab India பிராண்ட் சமீபத்தில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது. பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட்டைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூடுபிடித்தது. 


ஃபேப் இந்தியா தீபாவளியை ("Jashn-e-Riwaaz")உருது மொழியில் பாரம்பரியங்களின் கொண்டாட்டம் எனப் பொருள்படும் வகையில் குறிப்பிட்டு தனது விளம்பரங்களை செய்தது. அக்டோபர் 9ம் தேதி அது தொடர்பாக ட்வீட்டையும் பதிவிட்டது.  “அன்பும் ஒளியும் நிறைந்த தீபாவளியை வரவேற்கும் விதமாக ஃபேப் இந்தியா தனது உடைகளின் கலெக்‌ஷன் மூலம் இந்திய கலாச்சாரத்திற்கு மரியாதை செலுத்துகிறது” என ட்வீட் செய்தது. 




இதையடுத்து தீபாவளி  "Jashn-e-Riwaaz" கிடையாது, இந்து பண்டிகைகளை ஆபிரஹாம் மதங்களாக( யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) மாற்றும் முயற்சிதான் இது. மாடல்களை பாரம்பரிய இந்து உடைகள் இல்லாமல் காட்டுவதை கட்டாயம் எதிர்க்க வேண்டும்.ஃபேப் இந்தியா போன்ற பிராண்ட்கள் இத்தகைய திட்டமிட்ட தவறான செயல்களுக்கு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்” என பதிவிட்டிருந்தார் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா. 






இதையடுத்து சிலர்,  #BindiTwitter
#NoBindiNoBusiness போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கினர். 


 






இந்நிலையில் சிலர், பொட்டு வைப்பது ஒவ்வொருவரின் விருப்பம். ஒருவர் பொட்டு வைக்கவில்லை என்றால் அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் கிடையாது என்றும் எதிர்வினையாற்றினர். 






ஃபேப் இந்தியாவின் விளம்பரத்தில் உள்ள 3 மாடல்களும் சல்வார் கமீஸ், புடவை, குர்தா பைஜாமா தான் அணிந்திருந்தனர். அவை பாரம்பரிய இந்திய உடைகள் கிடையாதா எனவும் கேள்வியெழுப்பினர். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தனது விளம்பரத்தைத் திரும்ப பெறுவதாக ஃபேப் இந்தியா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.