மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடி நகரில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் 36.98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடம் மற்றும் 33,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளித் தகடு ஆகியவற்றை நன்கொடையாக அளித்து கவனம் ஈர்த்துள்ளார்
ஆந்திரப் பிரதேசம், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான சதீஷ் குமார் அன்னம் எனும் இந்நபர் நன்கொடை அளித்துள்ளதை முன்னதாக கோயில் நிர்வாகத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
சதீஷ் பிரபாகர் அன்னம் எனும் இந்நபர் 770 கிராம் எடையுள்ள இந்த விலை உயர்ந்த தங்க கிரீடத்தையும், 620 கிராம் எடையுள்ள வெள்ளித் தகடுகளையும் ரக்ஷா பந்தன் தினமான நேற்று (ஜூலை.11) அளித்ததாக ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் பாக்யஸ்ரீ பனாயத் தெரிவித்தார்.
கடந்த மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 80 வயது மருத்துவர் ஒருவர் இதேபோல் கோயில் அறக்கட்டளைக்கு 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தை சேர்ந்த 80 வயதான மருத்துவர் மந்தா ராமகிருஷ்ணா கடந்த 1992 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷீரடி நகரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது கோயிலில் உள்ள அர்ச்சகர் ஒருவர், சாய்பாபாவின் கிரீடத்தைக் காட்டி, இதுபோன்ற ஒன்றை தானமாக வழங்குமாறு மருத்துவரிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது அவர்களிடம் கிரீடம் வாங்குவதற்கு பணம் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்படியாவது விலைமதிக்கத்தக்க தங்க கிரீடத்தை வழங்கிவிடுவோம் என எண்ணியபடி இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் 30 ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது தனது 80 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை 707 கிராம் எடையுடன் 35 கிராம் அமெரிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ள தங்க கிரீடத்தை மருத்துவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஸ்ரீசாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் பாக்யஸ்ரீ பனாயத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்