கணவன் கைவிட்ட நிலையில் நாட்பட்ட நோயினால் பதித்து உயிருக்கு போராடி வந்த தனது 9 வயது மகனை , கருணை கொலை செய்யுமாறு விண்ணப்பம் அளிக்க நீதிமன்றம் சென்ற போது தாயின் மடியிலேயே , சிறுவன் உயிர் இழந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தேயே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .


ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம் பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிகள் மணி மற்றும் அருணாம்மா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மணிக்கு ஹர்ஷவர்தன் என்ற மகன் இருந்தான் . கடந்த நன்கு வருடங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தில் மீது ஏறி விளையாடி கொண்டு இருக்கும் பொழுது ஹர்ஷவர்தன் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தான்  .




சிறிது நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய ஹர்ஷவர்தன் பழையபடி  பள்ளிக்கும் சென்று வந்திருந்தான் . திடீரென்று சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஹர்ஷவர்தனுக்கு மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு  காது , மூக்கு ,கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது .


இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அருணாம்மா , தனது உறவினர் , மற்றும் ஊர்காரர்களிடம் இருந்து நான்கு லட்சம் ருபாய் வரை கடன் பெற்று அவருக்கு வேலூர் உற்பட பல தனியார் , மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தார் . இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவரது கணவர் மணியும் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்  .


கடன் பிரச்னை ஒருபக்கம் , மகனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத சோகம் ஒரு பக்கம் என்று கலங்கி நின்ற அருணாம்மா , மனதை கல்லாகி கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி , நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்  .


இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை புங்கனூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டை நேரில் சென்று மனு அளிக்கலாம் என்று தனது கிராமத்தில் ஒரு ஆட்டோ மூலம்  புங்கனூர்  நீதிமன்றத்தை  சென்று அடைந்த போது , கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் விடுப்பில் உள்ளதாக தெரிவித்தனர் . 


வேறுவழின்றி மீண்டும் ஹர்ஷவர்தனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்து ஆட்டோவில் அழைத்து கொண்டு வரும் பொழுது அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு , பேச்சுமூச்சு இல்லாமல் தனது தாயின் மடியிலேயே ஹர்ஷவர்தன் மயங்கி விழுந்தார்  .


பதறிப்போய்  அவரை உடனடியாக அருகாமையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அருணாம்மா , அங்கு இருந்த  மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக அறிவித்தனர்  .


மேல்சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி தனியொரு பெண்ணாக இருந்து தனது மகனை பேணிக்காத்து கடைசியில் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலையிக்கு  தள்ளப்பட்டு  அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்க சென்றபோது தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சம்பவம் , ஆந்திர மாநிலத்தையே  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .