ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ விரேன் மெர்சன்ட் ஷைலா தம்பதியின் மகள் ராதிகா மெர்சென்ட் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோயிலில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று குடும்பத்தினர், நண்பர்கள் சூழ ரோக்கா விழா நடைபெற்றது.  இந்நிலையில் இன்று அன்டிலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், சல்மான் கான் போன்றோர் பங்கேற்ற்றனர். கோல்தனா, சுனாரி விதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குஜராத்தி இந்து குடும்பத்தில் இவை முக்கியமான நிகழ்வாகும்.






யார் இந்த அனந்த் அம்பானி?


அனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய மகனாவார். இவர் அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடர் நிறுவனத்தில் அனந்த் அம்பானி எக்ஸிக்யூடிவ் இன் சார்ஜாக இருக்கிறாஅர். ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்சூர், ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸில் இவர் போர்டு மெம்பராக உள்ளார். இவர் திருமணம் செய்யவுள்ள ராதிகா மெர்சென்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.






கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முகேஷ் அம்பானி தனது உயில் மூலம் யார் யாருக்கு என்ன சொத்து என்று பிரித்து எழுதினார். அதன்படி தனது இரட்டைக் குழந்தைகளான இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானிக்கு டெலிகாம் மற்றும் ரீட்டெய்ல் நிறுவனங்களையுன் அனந்த் அம்பானிக்கு புதிய எரிசக்தி துறையையும் ஒதுக்கினார்.


இஷா அம்பானி ஆனந்த் பிராமல் என்பவரை 2018ல் திருமணம் செய்தார். ஆனந்த பிராமல் என்பவர் பிராமல் குரூப் நிறுவனரின் மகன். 2019ல் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ப்ரித்வி என்ற மகன் இருக்கிறார்.