வேலைநிறுத்தம்:


வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.


பேச்சுவார்த்தையும், சமாதானமும்:


இந்நிலையில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் பேச்சுவர்த்தை நடைபெற்றது. இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளுடன், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலர் நாகராஜன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் முடிவில் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் நடக்க இருந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறபட்டுள்ளது. 


5 நாட்கள் விடுமுறையா?


குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு வியாழனன்று விடுமுறை விடப்பட்டது. அதைதொடர்ந்து,  28ம் தேதியான இன்று 4வது சனிக்கிழமை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளையும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்பட்ட நிலையில்,  வார விடுமுறை மற்றும்  வேலநிறுத்தத்தால் 2 நாட்கள் இயங்காதது என, வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாமல் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தின் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.