Watch Video : பிறந்தநாள் கொண்டாடிய ஆனந்த் அம்பானி.. காலில் விழுந்த ஊழியர்.. நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது ஊழியருக்கு விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

Continues below advertisement

Watch Video : முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது ஊழியருக்கு விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

Continues below advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி. முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 82.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இவர் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இளைய மகன் ஆனந்த் அம்பானி. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் சிலவற்றை இவர்கள்தான் கவனித்து வருகின்றனர்.   இந்நிலையில், ஒரு சர்ச்சையிலும் சிக்காத முகேஷ் அம்பானி மகன்கள் தற்போது அவரின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

காலில் விழுந்த ஊழியர்

அந்தவகையில்,  ஆனந்த அம்பானி விமானத்தில் ஊழியர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆனந்த அம்பானி கலந்து கொண்டார். அப்போது அந்த நபருக்கு கேக் வெட்டப்பட்டது. உடனே அந்த ஊழியர் ஆனந்த் அம்பானியின் காலில் விழுந்துள்ளார்.

தன்னைவிட வயதில் பெரியவர் என்று கூட நினைக்காமல் அவரின் தோளில் தட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், கேக்கை அந்த ஊழியருக்கு ஆனந்த் அம்பானி ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான், ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விளாசி வரும் நெட்டிசன்கள்

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் காலாய்த்து வருகின்றனர் அதன்படி, "எவ்வளவுதான் பணம்  இருந்தாலும் வயதில் மூத்தவரை காலில் விழ வைப்பது சரியல்ல என்றும் இதுபோன்று நடந்துகொள்வது ஏற்புடையதல்ல” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவரை காலில் விழ வைப்பது என்பது இந்திய கலாச்சாரம்  இல்லை என்றும் ஊழியர்களை அடிமையாக நடத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் இதுபோன்று பலரும் ஆனந்த் அம்பானியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement