தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 9.4 மில்லியனாக உள்ளது. அதற்கு காரணம் தொழிலதிபர் என்பதை தாண்டியும் அவரின் பதிவுகள் எப்பவுமே வித்தியாசமாக இருப்பதே ஆகும்.


”இதை நீங்க எங்கேயுமே கத்துக்கமுடியாது..” : சிறுதொழில் பெண் நிறுவனரை போற்றி ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்


இந்திய மக்களின் பல கண்டுபிடிப்புகளை அவர் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதோடு, தன்னால் ஆன உதவிகளையும் அவர் செய்வார். அதேபோல் வித்தியாசமான மனிதர்கள், வேடிக்கையான சம்பவங்களையும் அவர் பதிவில் இடம் பெறும்.






அந்த வகையில் அவர் ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.அந்த வீடியோவில் நான்கு இளைஞர்கள் நகரும் டைனிங் டேபிள் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டே பயணம் செய்கின்றனர். அப்போது அந்த இளைஞர்கள் பெட்ரோல் பல்க்கில் ஒன்றில் பெட்ரோல் நிரப்பி விட்டு அங்கிருந்து சாப்பிட்டுக் கொண்டே பயணம் செய்கின்றனர். 


இதனை I guess this is e-mobility. Where ‘e’ stands for eat… என்ற கேப்ஷன் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.


மேலும் முதல் முறையாக சாலையில் நகர்ந்து கொண்டே செல்லும் மொபைல் டைனிங் டேபிளை பார்த்து இணையவாசிகள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். பலரும் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் சிலர் இப்படி நகர்ந்து கொண்டே சாப்பிடுவது எவ்வளவு சூப்பராக இருக்கும் தெரியும? ஆனால் நீங்கள் சொல்வது போல இவர்கள் வித்தியாசமானவர்கள் தான் என தெரிவித்துள்ளனர். ஒருவர் எனது மகன் இந்த வீடியோவை பார்த்த பின் தனது நகரும் வண்டிகளில் அமர்ந்து கொண்டு தான் சாப்பிடுகிறா என வேடிக்கையாக பதிவு செய்துள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண