தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்ட நிர்வாகம் விளையாட்டை கொண்டாடவும் ஊக்குவிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பதிவிட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் நடனத்தின் மூலம் செஸ் போட்டியின் நுணுக்கங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், நாட்டுப்புற மற்றும் தற்காப்புக் கலைக் கூறுகளை ஒருங்கிணைத்து, பல்வேறு சதுரங்கக் காய்கள் உயிர்பெற்று செஸ் போர்டில் போரில் ஈடுபடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இயக்கிய இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. 






இதை பாராட்டியவர்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். வீடியோவைப் பகிர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர், “சூப்பர். புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு இதை இயக்கியதாக அறிகிறேன். நம் கற்பனையில் செஸ் காய்கள் உயிர்ப்பிக்கின்றன. போட்டி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது நம்பகத்தன்மையாக உள்ளது. பிராவோ!" என பதிவிட்டுள்ளார்.


கடந்த வாரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியின் கிளிப்பை தொடர் ட்வீட்களில் விவரங்களுடன் பகிர்ந்திருந்தார். அதில், “#chessolympiad22ஐ ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளன.


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் இந்த அழகிய காணொளி, செம்மொழி, நாட்டுப்புற, மல்யுத்தம் மற்றும் சிலம்பம் கலைஞர்கள் நம்மை ஆக்கப்பூர்வமான கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று, நேரடி செஸ் கதாபாத்திரங்களாக மாற்றி, விளையாட்டின் சாரத்தை அதன் உண்மையான உணர்வில் வெளிப்படுத்துகிறார்கள்" என ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.






மஹிந்திராவின் பதிவுக்கு பதிலளித்த பல பயனர்கள் அவரது உணர்வை எதிரொலித்து வீடியோவை பாராட்டினர். "மனதைக் கவர்ந்துள்ளது. நடிப்பு, நடனம், இசை, படப்பிடிப்பு போன்ற கலை நிகழ்ச்சிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைக் காட்ட இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குழந்தைகளின் ஆரம்பக் கல்வியில் அவர்களின் கருத்துக்களை உருவாக்க அதை ஏன் பயன்படுத்த கூடாது?" என பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண