Mumbai at Risk : எச்சரிக்கை! அதிகமா உப்பு உணவுல எடுத்துக்கிட்டா உயர் ரத்த அழுத்தம் வரும் - மும்பை BMC ஆய்வு 


Brihanmumbai Municipal Corporation (BMC) தற்போது ஆராய்ச்சி ஒன்றை மும்பையில் வசிக்கும் மக்களை வைத்து நடத்தியதில் அதிக அளவு உப்பு உட்கொள்வதன் விளைவாக18-69 வயதிற்குட்பட்டவர்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 


மும்பையில் BMC அறிவியல் பூர்வமான STEP கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் மும்பையில் வசிப்பவர்கள் 5000 பேரை வைத்து ஆராய்ச்சி நடத்த தித்தமிட்டது. அந்த அறிவியல் ஆய்வில் சராசரியாக அந்த மக்கள் அனைவரும் சுமார் 8.9 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவானது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த ஆரோக்கியமான அளவான 5 கிராம் உப்பைவிடவும் அதிகமாக இருந்தது. அதன் விளைவாக மொன்றில் ஒருத்தருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறிய பட்டுள்ளது. 


BMC சுகாதார ஆணையர் டாக்டர். சஞ்சீவ் குமார் இது குறித்து கூறுகையில் மும்பையில் வசிப்பவர்களில் 34% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக முதற்கட்ட ஆராய்ச்சி பகுப்பாய்வு காட்டுகிறது என்றார். இது அதிகபடியான உப்பு உட்கொள்வதால் இருக்கலாம். 


உயர் இரத்த அழுத்தம் இறப்புக்கான மிகப்பெரிய ஒரு காரணமாக இருப்பதால் BMC அதைச் சமாளிக்க ஒரு பொதுவான சுகாதார திட்டத்தை டாக்டர் குமார் பகிர்ந்துள்ளார். 


BMC நிர்வாக சுகாதார அதிகாரி டாக்டர் மங்கள கோமரே இது குறித்து கூறுகையில், மும்பையில் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் அதிகம் உள்ளனர் என்றார். முறையான சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படாவிட்டால் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு அது வழிவகுக்கும் என்றார். 



BMC இன் சுகாதாரக் குழு இந்த இக்கட்டான நிலைமையை சரி செய்வதற்காக மூன்று நிலை திட்டத்தை திட்டமிட்டுள்ளது. முதலில் சமூக சுகாதாரப் பணியாளர்கள் குடிசை பகுதிகளில் உள்ளவர்களின் ரத்த அழுத்தத்தை கண்டறிவதற்காக வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் டாக்டர். கோமரேவின் கூறுகையில் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோய்களுக்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கவும் அவர்களுடன் வரும் நபர்களையும் பரிசோதனை செய்வதற்காக தனியாக ஒரு இடம் ஒடுக்கப்படும் என்றார். 


அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் ஸ்லம்களில் 'போர்டா கேபின்' வடிவில் சிறிய கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றார். BMC இன் தற்போதுள்ள சில மருந்தகங்களில் பாலிகிளினிக்குகளும் அமைக்கப்பட்டு இலவசமாக பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என்றார். நகரத்தில் உள்ள 30 வயதிற்குட்பட்டவர்களை பரிசோதனை செய்வதே எண்களின் குறிக்கோள் என்றார் டாக்டர் குமார். 


இரத்த அழுத்தத்தின் அளவு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு மிகவும் அதிகமாக இருப்பவர்கள் சிவிக் மருத்துவர்களிடம் அனுப்பப்படுவார்கள். BMC இன் துணை நிர்வாக சுகாதார அதிகாரி, டாக்டர். தக்ஷா ஷா கூறுகையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்காக  வாழ்க்கைமுறை தலையீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.   நவம்பர் 2021 முதல் ஜூன் 2022 க்கு இடையில் மட்டும் 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவு நிபுணர்களின் உதவியுடன் ஆலோசனை வழங்கப்பட்டது என்றார்.