போதைப்பொருள்களின் பயன்பாடு தற்போது மிகவும் அதிகரித்து விட்டது. இளம் தலைமுறையினர் இதன் மூலம் மோசமாக பாதிக்கப்படுவதாகவும், இது கரையானகளை போல அவர்களின் உடல்நலனை அரிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


தேசிய மாநாடு


பஞ்சாப்பின் ராஜ் பவனில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா போதை பொருளின் பாதிப்புகள் மற்றும் அதன் வீரியம் குறித்து பேசினார்.



அமித்ஷா பேச்சு


இது குறித்து அவர் பேசுகையில், "ஆரோக்கியமான சமூகம் மற்றும் வளமான தேசமே நமது இலக்கு. அதனை அடைய, சமரசம் இல்லாத கொள்கை அவசியம். போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வரும் அழுக்குப் பணம் நாட்டுக்கு எதிரான சில நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதால், தேசத்தின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இது மிகவும் அவசியமானது", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: நாம் அடக்குறதில்ல.. தழுவுகிறோம்.. ஜல்லிக்கட்டு இதுதான்.. விக்கிக்கு பாடம் சொன்ன கமல்ஹாசன்


எந்த சமரசமும் இல்ல


மேலும் பேசிய அவர், "2014ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது, ​​இந்திய அரசு போதைப் பொருள்களை எதிர்ப்பதில் எந்த சமரசமும் மேற்கொள்ளாது என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. அநேக உறுதிமொழியின் படி, விரைவாகவும் சரியான திசையிலும் போதை பொருட்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்கினோம் தற்போது வரை அந்த போராட்டம் சரியான வழியில் சென்று பல இடங்களில் கண்கூடாக தீர்வுகளை வழங்கி வருகிறது." என்று கூறினார்.






கரையான்களைப்போல அரிக்கும்


போதைப் பொருட்கள் இளம் தலைமுறையினரை மிகவும் மோசமாக பாதிக்கிறது என்றும், அது கரையான்களைப் போல அவர்களின் உடல்நலனிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கூறிய உள்துறை அமைச்சர், இந்தப் பேரிடரை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதாக கூறினார். "போதைப்பொருள் எடுத்துக்கொள்பவர்களுக்கு மட்டும் இது தீங்கு என்று நினைக்க வேண்டாம். சமூகம், பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் இந்த போதை பொருள் வணிகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் அதை முழுமையாக அகற்ற வேண்டும்," என்று அமித்ஷா கூறினார்.


30,000 கிலோ அழிப்பு


இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பின் கீழ், கைப்பற்றப்பட்ட 30,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை என்சிபி எரித்தனர். அந்த வகையில், டெல்லியில் 19,320 கிலோ போதைப்பொருட்களும், சென்னையில் 1,309 கிலோக்களும், கவுகாத்தியில் 6,761 கிலோ போதைப்பொருட்களும் கொல்கத்தாவில் 3,077 கிலோ போதைப்பொருட்களும் அழிக்கப்பட்டன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.