ஐபிஎல் போட்டிகளின் எட்டாவது சீசனை முன்னிட்டு பிசிசிஐ அமைப்பு சியர்லீடர் பெண்களில் அதிகம் பிரபலமானவர்களையும், பிரச்னைகளில் சிக்கியவர்களையும் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடுவதைத் தடை செய்துள்ளது. எனினும், ஐபிஎல் அனுபவம் குறித்து சமூக வலைத்தளமான ரெட்டிட் தளத்தில் சியர்லீடர் ஒருவர் தனது ஐபிஎல் போட்டி அனுபவங்களைக் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தன் பெயரை வெளியிடாத ஐபிஎல் சியர்லீடர் ஒருவர் moniker IPLCheer என்ற ரெட்டிட் முகவரியில் தன் பணி அனுபவங்களையும், அதில் இருக்கும் பிரச்னைகளையும் கூறியுள்ளார். இந்த சியர்லீடர் கூறியவற்றில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்..
1. `கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் அவர்களோடு பேசுவதற்கு அனுமதி இல்லை’
2. `பார்வையாளர்கள் தரப்பில் சில ஆண்கள் தங்கள் முகங்களை முத்தமிடுவது போல செய்து, படம் எடுப்பார்கள்.. நான் சிலர் என்னைப் பார்த்து புன்னகைக்கும் போது, அவர்கள் மீதே போட்டி முடியும் வரை முழுவதுமாக கவனம் செலுத்துவேன்’
3. `நான் பெண்ணியவாதி.. இந்தத் தொழில் குறித்து விமர்சனம் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.. நடனக் கலைஞராக இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திடும் போது, நான் பாலியல் பொருளாக நடத்தப்படுவதாக உணர்ந்தேன்’
4. `என் தொழில் இருக்கும் நிறவெறியை வெறுக்கிறேன்.. ஏன் எனது நடனக் குழுவில் 99 சதவிகிதம் வெள்ளை இனப் பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? குட்டைப் பாவாடை அணிந்து வெள்ளை இனப் பெண்கள் நடனம் ஆடும் போது ஏற்றுக் கொள்பவர்கள் ஏன் இந்தியப் பெண்கள் அதையே செய்தால் ஏற்றுக் கொள்வதில்லை?’
5. `நான் மும்பையில் உள்ள ஏஜென்சி மூலமாக நடனத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளேன்.. மேலும் நான் பாலிவுட் மியூசிக் வீடியோக்களுக்காக பின்னணியில் நடனம் ஆடியிருக்கிறேன்.. எனது நடனம் குறித்த பின்புலம் காரணமாக எனக்கு ஐபிஎல் போட்டிகளில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது’
6. `ஐபிஎல் போட்டிகளோடு தொடர்பே இல்லாத நபர்களால் மேட்ச் ஃபிக்ஸிங் நிகழ்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இதன்மூலம் மேட்ச் ஃபிக்ஸிங் நடப்பதில்லை என்பது பொருள் இல்லை.. நாங்கள் கிரிக்கெட் வீரர்களிடம் உரையாடக் கூடாது என்பதால் விவரங்கள் தெரியவில்லை’
7. `நாங்கள் தவறான நடத்தை கொண்டவர்கள் அல்ல. என்னுடன் பணியாற்றிய சியர்லீடர் பெண்கள் பலரும் மரியாதை மிக்கவர்கள்.. எனவே நான் தவறான நடத்தை கொண்டவர்களுடன் பணியாற்றவில்லை.. அனைவரும் இதைப் பேசுவதால் நான் விளக்கியிருக்கிறேன்..’
8. `கிரிக்கெட் விளையாட்டில் சியர்லீடர்களின் நடனம் பொருத்தமாக இருக்கிறது. 4, 6 ரன்களை அடிக்கும் போதும், இடைவேளைகளின் போதும் பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் உற்சாகப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது’