ஒடிசா மாநிலத்தில் நீர் இருக்கும் குழிக்குள் விழுந்த யானையானது பாதுகாப்பாக மீட்கப்பட்டது. 


இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, சமூக ஊடகங்களில்,  வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது வன விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவார். இவர் பதிவிடும் காட்சிகளால், காடுகளில் சென்று பார்க்க முடியாத காட்சிகளை, மக்கள் அதை பார்த்து ஆச்சர்யமும் மகிழ்ச்சியையும் அடைவர். 
 
இந்நிலையில் இவர், பதிவிட்ட வீடியோக்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் , யானை ஒன்று குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. 






ஒடிசா மாநிலம் நார்ளா என்கிற பகுதியில் நீர் இருக்கும் குழிக்குள் யானை விழுந்து, வெளியே வராமல் சிக்கி கொண்டதை பார்க்க முடிகிறது. குழிக்குள் இருக்கும் யானையானது பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த யானை காட்டிற்குள் சென்றது. 


இந்த தருணத்தில், இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், மீட்பு துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்தியாவில் , யானைகளை பாதுகாக்கவும் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்திய அரசு யானைகள் பாதுகாப்பகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!