வனப்பகுதியின் சாலையோரத்தில்,  மான் ஒன்று பாம்பை உண்ணும் காட்சியானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, சமூக ஊடகங்களில்,  வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது வன விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவார். இவர் பதிவிடும் காட்சிகளால், காடுகளில் சென்று பார்க்க முடியாத காட்சிகளை, மக்கள் அதை பார்த்து ஆச்சர்யமும் மகிழ்ச்சியையும் அடைவர். 
 
இந்நிலையில் இவர், பதிவிட்ட வீடியோக்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம், மான்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், பாம்பு உண்ணும் காட்சியானது பலருக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


பாம்பை மான் உண்ணும் வீடீயோ:
 





வன பகுதி வழியாக , சாலையில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர்,  காட்டுப் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு மான் ஒன்று பாம்பை  உண்ணும் காட்சியை படம் பிடித்திருக்கிறார். இந்த வீடியோவை பதிவு செய்யும் நபர் பின்னணியில் கேட்கிறார், " பாம்பு சாப்பிடுகிறதா?" என்று
 
இந்த வீடியோ குறித்து சமூகவலைதள பதிவுகள் தெரிவிக்கையில், "இயற்கை நம்பமுடியாத மற்றும் சில நேரங்களில் எதிர்பாராத தொடர்புகளால் நிறைந்துள்ளது. மேலும் இந்த வீடியோ அத்தகைய ஒரு நிகழ்வைக் காட்டுகிறது. இது விலங்குகளின் நடத்தையின் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு இனங்கள் உயிர்வாழத் தழுவிக்கொள்ளும் தனித்துவமான வழிகளை நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார். 


அசைவம் சாப்பிடுவது ஏன்:


நேஷனல் ஜியோகிராஃபிக் கூற்றின்படி, மான்களுக்கு பாஸ்பரஸ், உப்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் தேவைப்படும். குறிப்பாக தாவரங்களின்  வளர்ச்சி குறைவாக இருக்கும் காலங்களில், அவை அசைவ உணவுகளின் மூலம் , ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்யும் என தகவல் தெரிவிக்கிறது. 
 இந்த வீடியோவானது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலானது, தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோவை, சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தாலும் , தற்போது மீண்டும் வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது.