மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா, குஜராத்தின் சலங்பூரில் உள்ள ஸ்ரீ கஷ்டபஞ்சன் தேவ் ஹனுமன் கோயிலுக்குச் சென்று இன்று வழிபாடு மேற்கொண்டார். பின்னர், 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1100 அறைகளைக் கொண்ட யாத்ரி பவனைத் திறந்து வைத்தார்.


கோயிலில் அமித் ஷா வழிபாடு:


இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் மக்களுக்கும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இங்கு பிரம்மாண்டமான யாத்ரி பவன் கட்டப்பட்டுள்ளதாகவும், சதுர்தசியை முன்னிட்டு இன்று திறந்து வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த யாத்ரி பவன் முழுமையான பசுமை வசதி கொண்டது. தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்களைத் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1100 அறைகளைக் கொண்ட யாத்ரி பவன் ரூ.200 கோடி செலவில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது என்றும் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.


பகவான் ஹனுமனின் குணங்களை விவரிக்க முயற்சிப்பது மனிதனுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நமது வேதங்களின்படி, ஹனுமன், நம் உலகில் உள்ள அபூர்வமான ஏழு ஜீவன்களில் ஒருவர் என்றும் அமித் ஷா கூறினார்.


"ஒன்றுபட்ட, சக்திவாய்ந்த இந்தியா"


ஞானம் மற்றும் நற்பண்புகளின் கடல் ஹனுமன் என்று துளசிதாசர் குறிப்பிட்டார். சிறந்த பக்தர், சிறந்த போர்வீரர், சிறந்த நண்பர், சிறந்த தூதர் என்று சிறந்த  குணங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமரின் பாதங்களில் அர்ப்பணிக்கும்போது, ஒருவர் ஹனுமன் மகாராஜைப் போல் மாறி அமரத்துவம் அடைகிறார் என்று அமித் ஷா கூறினார்.


ஒன்றுபட்ட, சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க சர்தார் படேல் உறுதிபூண்டதாக அவர் கூறினார். சர்தார் படேலின் 150 வது பிறந்த நாளை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு அவரது எண்ணங்களையும் கொள்கைகளையும் ஊக்குவிப்பது மட்டுமின்றி, நாட்டிற்காக அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நோக்கி இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று அமித் ஷா கூறினார்.


இதையும் படிக்க: Diwali 2024 : தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் குவிந்த மக்கள்! டக்கு டக்குன்னு விற்று தீர்ந்த இறைச்சி!