முகேஷ் அம்பானியின் குடும்பம் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்வதாக வெளியான செய்திகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும்  400,000 சதுர அடி பரப்பளவிலான  அன்டிலியாவில் வசிக்கிறார்.  




முன்னதாக, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதன் பிறகுதான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள போதிலும் வருடத்தில் பாதி நேரம் மும்பையிலும், பாதி நேரம் லண்டனிலும் தங்க அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், லண்டனிலேயே அல்லது உலகின் எந்த மூலையிலேயோ குடியேறவோ, குடிபெயரவோ அம்பானிக்கும் அவரது  குடும்பத்திற்கும் எந்த திட்டமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் வாங்கியதன்  நோக்கம் அதனை உள்நாட்டு விதிமுறைகளோடு கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரெசார்ட்டாக மேம்படுத்துவதுதான். ரிலையன்ஸ்நிறுவனத்தில் வேகமாக வளரும் நுகர்வோர் வணிகத்துடன் தற்போது வாங்கியுள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டும் இணையும். அது இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பலின் தடத்தை உலகம் முழுக்க விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




சமீபத்தில் மும்பையில் தங்களது வீட்டருகே வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவத்திற்குப் பின்பு அம்பானி குடும்பம் குடிபெயரும் முடிவுக்கு வந்ததாக ஏற்கெனவே வெளியான செய்தியில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


பக்கிங்ஹாம்ஷைர் ஸ்டோக் பார்க் இதற்கு முன்பு ஆடம்பர ஹோட்டலாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்பாகவே ஸ்டோக் பார்க் கட்டடத்தில் state-of-the-art மெடிக்கல் சேவை தளம் அமைக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண