பஞ்சாப் முதலமைச்சர் கேப்டம் அம்ரிந்தர் சிங் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்தார். காங்கிரஸ் மேலிடம் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்னதாகச் செய்திகள் வெளியான நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக இன்றைய காலை நிலவரப்படி ‘முதலமைச்சர் பதவியிலிருந்து என்னை ராஜினாமா செய்யச் சொன்னால் கட்சியிலிருந்தே விலகிவிடுகிறேன்’ என அவர் கூறியிருந்தார். பஞ்சாப் காங்கிரஸில் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நீண்டகாலமாக உட்கட்சிப் பூசல் நிலவி வருவதற்கு இடையே தற்போது அவர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
Amarinder Singh Resigns: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அம்ரிந்தர் சிங் : பஞ்சாப் காங்கிரஸில் திருப்பம்!
ஐஷ்வர்யா சுதா | 18 Sep 2021 04:52 PM (IST)
முன்னதாக இன்றைய காலை நிலவரப்படி ‘முதலமைச்சர் பதவியிலிருந்து என்னை ராஜினாமா செய்யச் சொன்னால் கட்சியிலிருந்தே விலகிவிடுகிறேன்’ என அவர் கூறியிருந்தார்.
அம்ரிந்தர் சிங் - பன்வாரிலால்