ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தற்பொழுது சைபர் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியாவின் SITA PSS  சர்வரில் நுழைந்த ஹேக்கர்ஸ் , பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளாதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது . SITA PSS   சர்வரில்தான் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த விவரங்கள் சேமித்து வைக்கப்படும். இது மிகவும் ரகசியமான முறையில் பாதுகாக்கப்படும். ஆனால் இதனை ஹேக் செய்து தங்கள் வசப்படுத்திய ஹேக்கர்ஸ் ,  கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வரையில் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.  ஏர் இந்தியா நிறுவன பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




SITA PSS  சர்வரானது ஆஸ்ட்டேலியாவில் உள்ள ஜெனிவாவினை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது ஹேக் செய்யப்பட்டதில் பயணிகளின் பெயர், தொலைபேசி எண்கள், டிக்கெட் விவரங்கள், கிரிடிட் மற்றும் டெபிட் கார்ட்   விவரங்கள், பாஸ்வேர்ட் , பிறந்த வருடம், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வெளியாகியுள்ளன. கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருப்பாதால் , அவை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் கார்டின் பின்புறம் உள்ள CVV அல்லது CVC எண் குறித்த விவரங்கள் சேமிக்கப்படாது. 




 


எனவே பயணிகள் தங்களின் கடவுச்சொல்லை விரைந்து மாற்ற வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம மின்னஞ்சல் மூலம் தங்கள் பயணிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் ஏர் இந்தியா அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தவிர்த்து மலேசியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஃபின்னேர்,லுஃப்தான்சா, கேதாய் பசுஃபிக் உள்ளிட்ட விமானங்களின் சர்வர்களும் சைபர் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.