டாடா குழுமத்தைச் சேர்ந்த  ஏர் இந்தியா பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஆகியவற்றுடன் 470 விமானங்களை வாங்குவதற்கு பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


2021 அக்டோபரில் அரசாங்கத்திடமிருந்து வாங்கிய விமான நிறுவனமான டாடா குழுமம், தற்போது ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும் போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் வாங்கவுள்ளது.






அமெரிக்க ஜனாநிதிபதி:


”ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு விமானங்களை வாங்குவதை இன்று அறிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த கொள்முதல் அமெரிக்காவின் 44 மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை ஆதரிக்கும் என்றும் , மேலும் பலருக்கும் நான்கு ஆண்டு கல்லூரி பட்டம் தேவையில்லை" என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


போயிங் நிறுவனத்திடமிருந்து மேலும் 70 விமானங்களை வாங்க ஏர் இந்தியா வாங்க விருப்பம் உள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் மொத்த ஒப்பந்த மதிப்பு 45.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


ஏர்பஸ் உடனான டாடா குழுமத்தின் 250 விமான ஒப்பந்தம் 100 பில்லியன் டாலருக்கு மேல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




பிரான்ஸ் அதிபர்:


பிரதமர் நரேந்திர மோடி, ரத்தன் டாடா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிற தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் பேசிய ஏர்பஸ் தலைமை நிர்வாகி கியோம் ஃபௌரி, "ஏர் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு உதவுவது ஏர்பஸ் நிறுவனத்திற்கு இது ஒரு வரலாற்று தருணம். இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நட்புறவில் ஒரு மைல்கல்" என்று கூறினார்.


ஏ350 விமானங்கள் குறுகிய தூரத்திலிருந்து மிக நீண்ட தூர வழித்தடங்களில் திறமையாக பறக்கும் என்றும், வழக்கமான மூன்று வகுப்பு கட்டமைப்புகளில் 300 முதல் 410 பயணிகளையும், ஒற்றை வகுப்பு வடிவமைப்பில் 480 பயணிகளையும் ஏற்றிச் செல்லும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது.


ஏர் இந்தியா நிறுவனமும் தனது சேவையை சீரமைக்க முடிவு செய்துள்ளது. ஆகையால் நவீன தலைமுறை இருக்கைகள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அமைப்புகளை அமைக்கவுள்ளது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.