PM Modi: இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி  இன்று  உயர்மட்ட கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் 'ககன்யான்' திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.


சாதனையை நோக்கி இஸ்ரோ:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி:


இதனை அடுத்து, சூரியானை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 1ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் விண்கலம் நிலைநிறுத்தப்படும். இந்த இரண்டு திட்டங்களும் உலக நாடுகளுக்கு மத்தியில் பெயர் பெற்று கொடுத்தது. அதன் பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான 'ககன்யான்’ திட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானியானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


இந்நிலையில் தான், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ககன்யான் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதாவது, "2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என்று பிரத்யேகமாக இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்க வேண்டும். 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்ப வேண்டும். இந்த இலக்குகளை  நிறைவேற்றுவதற்கு தீவிரமாக செயல்பட வேண்டும்.  நிலவு ஆய்வுக்கான வரைப்படத்தை உருவாக்கி  படிப்படியாக அதனை நிறைவேற்ற வேண்டும்.  இந்தியாவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான என்ஜிஎல்வி, புதிய விண்வெளி ஏவுதளம் அமைத்தல், ஆய்வகங்கள்  உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ககன்யான் திட்டம் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்" என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.






முன்னதாக, ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்ட பணி குறித்து பிரதமரிடம் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர். ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது. அக்டோபர் 21ஆம் தேதி இதற்கான சோதனை நடைபெறும். விண்ணில் செலுத்துவதற்கு முன்பு 20 முறை சோதனைகள் செய்யப்பட உள்ளது. 3 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்த சோதனை செய்யப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.