பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்தார். தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடரும் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பிரச்சனை இருந்தால் இது போன்ற சந்திப்பு நிகழ்ந்திருக்காது எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.