புதிய கலால் கொள்கைக்கு மத்தியப் பிரதேச அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதன் கீழ், 'அஹதாஸ்' (மக்கள் குடிப்பதற்கு மதுபானக் கடையுடன் இணைக்கப்பட்ட பகுதி) மற்றும் கடை பார்கள் மூடப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மதுவுக்கு எதிரான சிவராஜ் சிங் சவுகான்


"முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மது அருந்துவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், அதனால் மாநிலத்தில் 2010 முதல் புதிய கடை எதுவும் திறக்கப்படவில்லை. மாறாக, கடைகள் மூடப்பட்டன. நர்மதா சேவா யாத்திரையின் போது, மாநிலத்தில் 64 கடைகள் மூடப்பட்டன. புதிய கலால் கொள்கை மது அருந்துவதை தடுப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.



மது அருந்த இடம் என்று தனியாக கிடையாது


“அனைத்து அஹாதாஸ் மற்றும் கடை பார்கள் மாநிலத்தில் மூடப்பட்டுள்ளன. இப்போது, ​​கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் மற்றும் மது அருந்துவதற்கென் பார் போன்ற இடங்கள் அமைப்பது இனி அனுமதிக்கப்படாது", என்று மிஸ்ரா அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு கூறினார். புதிய கலால் கொள்கையின் ஒப்புதலுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் 2,580 அஹாதாஸ் மற்றும் 31 கடை பார்கள் மூடப்படுகின்றன.


தொடர்புடைய செய்திகள்: Crime: 'வேலைக்கு வரமாட்டியா’ - நடுரோட்டில் 16 வயது சிறுமியின் முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற கடைக்காரர்..


உமாபாரதி மதுவிலக்கு பிரச்சாரம்


மத்தியப் பிரதேசத்தில் "கட்டுப்படுத்தப்பட்ட மதுக் கொள்கை" வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதியின் கோரிக்கைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசாங்கம் தனது கருத்தை ஏற்றுக்கொண்டால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் பாஜகவை நோக்கிச் செல்லக்கூடும் என்று கூறி உமாபாரதி முன்பு மாநிலத்தில் முழு மதுவிலக்கு வேண்டி பிரச்சாரம் செய்தார்.



புதிய கலால் கொள்கை


மத்திய பிரதேசத்தின் புதிய கலால் கொள்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:



  • மாநிலத்தில் அனைத்து அஹாதாக்கள் மற்றும் கடை பார்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு கடைகளிலும், மது அருந்தும் இடங்களிலும் மதுபானங்கள் விற்கப்படாது.

  • கல்வி நிறுவனங்கள், பெண்கள் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிலிருந்து மதுக்கடைகளின் தூரம் 50 மீட்டரில் இருந்து 100 மீட்டராக உயர்த்தப்படுகிறது.

  • குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்.

  • ஆதாரங்களின்படி, புதிய கலால் கொள்கை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும், இருப்பினும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.