Watch Video: மின்கம்பத்தில் மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூர கணவர்.. ஷாக்கிங் வீடியோ..!

மனைவியை ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

Continues below advertisement

கணவன்-மனைவி தொடர்பான பிரச்னை காரணமாக சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று. அந்தவகையில் ஒரு கணவன் மனைவி சண்டையில் கணவர் மனைவியை கட்டி வைத்து தாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாமா பிகாரி. இவருக்கு குஷமா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் அர்செனா என்ற கிராம பகுதியில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 

இந்தச் சூழலில் கடந்த 14ஆம் தேதி கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையின் போது குஷமா தேவியை கணவர் ஷ்யாமா பிகாரி தாக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் அவரை கொலை செய்து விடுவதாக கணவர் மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவரும் மிரட்டியுள்ளனர். 

 

இதை பொருட்படுத்தாமல் அந்தப் பெண் காவல்துறைக்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அதை அறிந்து கொண்ட கணவர் பிகாரி மற்றும் அவருடைய தாய் குஷமா தேவியை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் குஷமா தேவியை ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அருகே இருந்தவர்கள் பார்த்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த  வீடியோவை தொடர்ந்து காவல்துறையினர் கணவர் ஷ்யாமா பிகாரி மற்றும் அவருடைய தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். ஆகவே அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola