திருவள்ளூரில் 2 மனைவி மகளுடன் வசித்து வரும் 63 வயது முதியவர் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த குக் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி 3 மாத கர்ப்பமான நிலையில், மாணவியின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றனர். உடனடியாக மருத்துவமனையில் இருந்த ஆவடி மகளிர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு நேரில் சென்ற மகளிர் காவல் ஆய்வாளர் லதா விசாரணை செய்ததில், முதியவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அதே பகுதியை சேர்ந்த பலராமன் ( 63 ) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 திருமணம் முடிந்து 2 மகள் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன் மாணவியின் வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. உடனடியாக பலராமனை கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொரட்டுரில் பட்டப்பகளில் நகை கடையில் நகை வாங்குவது போல் பாவனை செய்து தங்க செயினை திருடிசெல்ல முயன்ற நபரை நகை கடைக்காரரே கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சென்னை அடுத்த பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் மிடல்லால். இவர் அதே பகுதியில் மிட்டலால் ஜூவல்லரி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் மிடல்லால் கடையில் இருந்த சமயத்தில் நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர் நபர் ஒருவர் வந்துள்ளார். அப்பொழுது அவர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்து கொண்டிருந்தார். அந்த சமையத்தில் 2.5 சவரன் மதிப்புள்ள 2 தங்க சங்கிலிகளை திருடி பின்னர் நகை வேண்டாம் என கூறி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
நகை கடை உரிமையாளர் நகைகளை சரிபார்த்தபோது 2.5 சவரனில் 2 செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து சோதனை செய்ததில் தனது பேண்ட் பாக்கெட்டில் நகையை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட நபரை கொரட்டுர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது அம்பத்தூர் மண்ணுர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து 2.5 சவரன் 2 தங்க செயினை மீட்ட காவல்துறையினர் உரியவரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்