அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை மாற்றியமைக்கும் கொள்கையாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது இராணுவத்தை வலுப்படுத்துவதிலும் எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்துவதிலும் "கேம் சேஞ்சராக" இருக்கும் என்றும், அதே நேரத்தில் இந்த புதிய திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர்க்கப்படும் வீரர்கள் இளமையுடனும் தொழில்நுட்பத்தில் திறன்பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். 


முப்படைகளுக்கான அக்னிவீரர்களின் முதல் தொகுப்புடன் அவர் உரையாற்றும் போது இவ்வாறு பேசினார்.


வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது உரையில், எதிர்காலத்தில் சைபர் போர்களின் சவால்கள், தொடர்பற்ற எல்லையில் இருந்து போர்புரிதல் போன்றவற்றின் தன்மைகள் குறித்து விவாதித்தார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வீரர்கள் ஆயுதப்படைகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் கூறினார்.




2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய திட்டம் பல ஆண்டுகாலமாக புழக்கத்தில் இருந்த ஆட்சேர்ப்பு முறைக்கு குட்பை சொல்லியது.  இந்த முறைப்படி நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மூன்று படைகளிலும் வீரர்கள் நீடிப்பார்கள். அவர்களில் 25 சதவிகிதம் பேர் வழக்கமான சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 


புதிய மாடலின் கீழ் பணியமர்த்தப்பட்ட அக்னிவீரர்கள் ஜனவரி தொடக்கத்தில் தங்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். இந்த அறிமுகத் திட்டத்தின் முன்னோடிகளாக இருக்கப்போகும் அந்த வீரர்களை பிரதர் மோடி  வாழ்த்தினார்.


‘புதிய இந்தியா’ புதுப்பிக்கப்பட்ட வீரத்தால் நிரம்பியுள்ளது என்றும், ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதுடன், அவர்களை தன்னிறைவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். இந்தத் திட்டம் பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் என்றும் பேசிய அவர், முப்படைகளிலும் பெண் அக்னிவீரர்களைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.


முன்னதாக, 


அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் உள்ள காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ராணுவ விவகாரத் துறை கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி அக்னிபாத் திட்டம் இன்று முளைத்த யோசனை அல்ல என்றும் பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போருக்குப் பிறகு அதன் தேவை உணரப்பட்டது என்றும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


”அப்போது கார்கில் போர் கமிட்டி, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் நமது நாட்டில் உள்ள ராணுவம் மிக முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறியது,” என்று லெப்டினன்ட் ஜெனரல் பூரி நமது செய்தி நிறுவனத்துடனான ஒரு பிரத்யேக உரையாடலில் கூறினார்.


"இன்று இந்த திட்டத்தின்படியான சராசரி வயது வரம்பு 32 ஆண்டுகள், ஆனால் அந்த வயதை 26 வயதாகக் குறைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கம், மேலும் அதிகமான ஜவான்கள் இதன் கீழ் வருவதை உறுதி செய்வதுதான். 2030ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய மக்கள்தொகை எண்ணிக்கையின்  பிரதிபலிப்பாக நமது இந்திய ராணுவம் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.