நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 (Aditya L1) எனும் விண்கலம், இன்று (செப்டம்பர் 2ம் தேதி) காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  127 நாட்கள் பயணிக்கும் ஆதித்யா எல்1,  பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 (L1) என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 1,500 லட்சம் கிலோ மீட்டர். அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்


இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்ததாவது :


சந்திராயன் திட்டங்கள் நிலவை சுற்றி அனுப்பப்பட்ட செயற்கைக்கோள், அதே போல பூமியை சுற்றியும் பல செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றி சென்றது. ஆனால் சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா வித்தியாசமானது. இது எந்த ஒரு கிரகத்தையும் சுற்றி அனுப்பப்படவில்லை. பூமி என்ற ஒரு கிரகம் சூரியன் என்ற ஒரு நட்சத்திரம், இரண்டு  சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும்,  அதில் மிக முக்கியமான ஒரு இடம் எல் ஒன் ( L1) . பூமியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த இடத்தில் செயற்கை கோள்  அனுப்பும்போது எப்பொழுதுமே, அந்த செயற்கைக்கோள் சூரியனை பார்த்துக் கொண்டிருக்கிற போல் நிலைநிறுத்தப்படும்.  மற்றொரு புறம் எப்பொழுதும் பூமியை பார்த்தபடி இருக்கும்.



பூமியிலிருந்து பார்த்தால் குறிப்பிட்ட சில மணி நேரம்தான் சூரியனை பார்க்க முடியும். பூமிக்கு வளிமண்டலம் இருப்பதால் , பல கதிர்வீச்சுகள் பூமிக்குள் வருவது கிடையாது. ஆனால் ஆதித்யாவில் இருக்கும் ஏழு கதிர்வீச்சு சாதனங்களை வைத்துக்கொண்டு, அனைத்து விதமான கதிர்வீச்சுகளும் ஆதித்யா செயற்கைக்கோளால் பார்க்க முடியும். காந்த புலன்கள் எந்த இடங்களில் எவ்வாறு மாறுகிறது, என்பதை பார்க்க முடியும். சூரியனை புரிந்து கொள்வதற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள , சூரியன் மத்தியில் எப்படி மிக அதிகமான வெப்பம் இருக்கிறதோ. மேலே வர வர வெப்பம் குறைகிறது. அதேபோல் சில இடங்களில் திடீரென வெப்பம் அதிகமாகிறது . அது மிகப்பெரிய அறிவியல் புதிர்.  சூரியனின் நடைபெறுகின்ற நிகழ்வுகள், சில வெடிப்புகள் வருகின்ற பொழுது, அதனால் பூமியில் உள்ள காந்த புலன்களை நம்மை பாதுகாத்து விடுகின்றன.



ஆனால் சூரியனில் வரும் கதிர்கள் சில சமயங்களில் செயற்கைக்கோள்களுக்கும் பாதிப்பை உருவாக்குகிறது. இந்த செயற்கைக்கோள்களை நாம் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதுபோன்ற விளைவுகளில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. (L1) எல் ஒன் என்ற இடத்தில் பதினைந்து லட்சம் கிலோமீட்டர் அப்பால் வைக்கப்பட உள்ள செயற்கைக்கோள், நமக்கு அது குறித்து முன்னதாகவே ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதை வைத்து செயற்கைக்கோள்களை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இது அறிவியலுக்கும்  சரி,  சூரியனுக்கும் ஆய்வு குறித்து இது மிக முக்கியமான செயற்கைக்கோள். தொழில்நுட்ப ரீதியாக எப்படி நிலவின் துருவ பகுதியை வெட்டுவதற்கு சற்று கடினமாக இருந்ததோ, செவ்வாய் வட்டப்பாதை அடைய சவாலாக இருந்தது. அதற்கு மேற்பட்ட சவாலாக இது இருக்கும்” என தெரிவித்தார்