நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். 


தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தேநீர் விற்றுக்கொண்டிருப்பதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக்கொண்டிப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 






முன்னதாக, மத்தியபிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்ததை இஸ்லாமியர்கள் வீடுகள், கடைகளை அம்மாநில அரசு ஜேசிபிக்களை கொண்டு இடித்து நொறுக்கியது. அதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்த பிரகாஷ்ராஜ், “ சிலைகள் கட்டப்படுகின்றன. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதே போல தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் உத்தவ் தாக்கரே சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



                                                       


தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு , கன்னடம் , இந்தி உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்தியாவின் முக்கிய மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாது அரசியல் ஆர்வமும் கொண்டவர்.


அவ்வபோது இவர் பேசும் கருத்துகள் அரங்க முக்கியத்துவம் பெற்றதாகவும் அமைந்திருக்கிறது. பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது பெற்ற நடிகர் . அவற்றுள் ஒன்று சிறந்த தயாரிப்பாளருக்கான விருது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.கிட்டத்தட்ட 7 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். 


ஜெய்பீம் சர்ச்சை 


இறுதியாக தமிழில் இவர் நடித்த கே.ஜி. எஃப்  திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த ஜெய்பீம் படத்தில், தமிழ் தெரிந்தும் இந்தியில் பேசும் குற்றவாளி ஒருவரை கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகளில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்ததால் , அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் நான்  படம் குறித்த புரிதல் வேண்டும் . படத்தில் பழங்குடியின மக்களின் அவதியை விட அறைதான் பெரிதாக தெரிகிறதா என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.