கேரளாவில் அன்னாச்சி பழத்துக்குள் வெடிவைத்து அதை உட்கொண்டதால் கர்ப்பிணி யானை கடந்த 2020-ஆம் ஆண்டு மே  மாதம் உயிரிழந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 


இரண்டு வாரங்களாக வாய், தும்பிக்கை பகுதிகளில் காயத்தோடு அந்த யானை சுற்றித்திரிந்தது. 15 வயதான அந்த யானை காயம் காரணமாக பல நாட்களாகவே எதையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்தவாறு நின்றபடியே உயிரிழந்தது. பின்னர் அதன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.  இந்நிலையில்  யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த கொடூர மரணம் பரவலான கவனத்தைப் பெற்றது. அப்போது காயமுற்று நிலையில் இருக்கும் யானையின் புகைப்படங்களும் வைரலாகின. திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யானைக்காக குரலெழுப்பினர்.


இதையும் படிக்க


‛வசைபாடி வாங்கிய வாய்ப்பு... வருவாய் ஈட்டுவதில் ஏய்ப்பு...’ யார் இந்த விஜயபாஸ்கர்?


முன்னதாக சர்வதேச ஹியூமேன் சொசைட்டி (The Humane Society International) எனும் தொண்டு நிறுவனம் யானையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. மேலும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.




அப்போது இது குறித்த விசாரணை தீவிரமெடுத்தது. இதுகுறித்த விசாரணையின்போது வயல்வெளியினுள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக அங்கிருந்தவர்கள் அன்னாச்சிப் பழத்தினுள் வெடிவைத்தது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ரியாசுதீன் மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 2வதாக குற்றம்சாட்டப்பட்ட ரியாசுதீன் பாலக்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆஜரானார். அப்துல் கரீம் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் முதலாவது குற்றவாளியைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண