சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று, நூற்றாண்டு காலத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டு,  உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக -  அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. 


இந்த ஆண்டின் உச்சிமாநாட்டுக்கு, 'புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது' என்பது கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 


ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில்  இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள், இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


மிஸ்டர் ஒரிஜினல்:


ஏபிபி நெட்வொர்க் உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பின் முதல் நாளில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா கலந்து கொள்கிறார். மாலை 7:40 மணிக்கு நடைபெற உள்ள அமர்வில், "மிஸ்டர் ஒரிஜினல்: மாறுதலுக்கு உள்ளாகும் பாலிவுட்" என்ற தலைப்பில் ஆயுஷ்மான் குரானா பேசவிருக்கிறார்.


பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பாடல்களை பாடி அசத்தி வரும் ஆயுஷ்மான் குரானா, தேசிய விருது, நான்கு பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 2013 மற்றும் 2019 ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலிலும் டைம் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலிலும் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.


பரேலி கி பர்ஃபி (2017), ஷுப் மங்கள் சாவ்தான் (2017), பதாய் ஹோ (2018), ட்ரீம் கேர்ள் (2019), பாலா (2019); அந்தாதுன் (2018); மற்றும் ஆர்டிகில் 15 (2019) உள்ளிட்ட படங்களில் யுஷ்மான் குரானா நடித்துள்ளார்.


முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் ஏபிபி மாநாடு:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாநாடு, உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. 


'புதிய இந்தியா' எதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது, இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நமது நாடு, சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டான 2047ஆம் ஆண்டுக்குள் எப்படி வளர்ந்த நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.