ABP Network Ideas Of India: இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து உரையாற்றும் எஸ்பிஎஸ் குழுமத்தின் நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா..!

எஸ்பிஎஸ் குழுமத்தின் நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா, "நாளைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

Continues below advertisement

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பு நாளை (பிப்ரவரி 24) தொடங்குகிறது.

Continues below advertisement

'புதிய இந்தியா' எதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நமது நாடு, சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டான 2047ஆம் ஆண்டுக்குள் எப்படி வளர்ந்த நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

எஸ்பிஎஸ் குழுமத்தின் நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா, "நாளைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில், கேலண்ட் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் அகர்வால் மற்றும் சென்கோ கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சுவாங்கர் சென் ஆகியோருடன் இணைந்து உச்ச மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

முதலீட்டாளரும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருபவருமான ஜுனேஜா, ஆயுர்வேத நிறுவனமான "திவிசா ஹெர்பல் கேர்" நிறுவனத்தை தொடங்கியவர். இது, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நகரும் நுகர்வோர் பொருட்களின் நிறுவனங்களில் (FMCG)ஒன்றாகும்.

"கேஷ் கிங்" பிராண்டின் நிறுவனர் என இந்திய சந்தையில் நன்கு அறியப்படும் ஜுனேஜா, 2015 ஆம் ஆண்டில், "கேஷ் கிங்" பிராண்டினை இமாமி லிமிடெட் நிறுவனத்திற்கு $262 மில்லியனுக்கு விற்று எஃப்எம்சிஜி துறையில் வரலாறு படைத்தார். இது இரண்டாவது அதிகம் ஊதியம் பெறும் பிராண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABP நெட்வொர்க்கின் உச்சிமாநாட்டில், உலக வங்கியின்படி, 2023 நிதியாண்டில் 6.9 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கும் இந்தியாவின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து ஜூனேஜா பேச உள்ளார். உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து ஒப்பீட்டளவில் பிரகாசமான இடத்தில் தொடர்கிறது என்றும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

பல்வேறு காரணிகளால், உலக அளவில் பல்வேறு குழப்பங்களும் நிறைகுறைகளும் நிலவி, பெரும் சவால்கள் நிறைந்த ஒரு காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  அறிவியலும் தொழில்நுட்பமும் அடுத்தக்கட்ட வாழ்வியல் தளத்தை உருவாக்கும்வகையில் பல கட்டமைப்புகளை உலகில் உருவாக்கி வருகிறது. இதில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இப்படியொரு சூழலில் நடைபெறும் இந்த மாநாட்டில், பல புதிய யோசனைகள், நம்மை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.

தற்போது, உலகின் ஒரு பக்கத்தில், உக்ரைன் மீதான படையெடுப்பு ஓராண்டு காலத்தை நெருங்குகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கடுமையான எதிர்ப்பையும், மிகச்சிறிய ஆதாயங்களையும் எதிர்கொண்ட போதிலும், போரில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டாமலே இருக்கிறார்.

சீனாவை எடுத்துக்கொண்டால், இரும்புக்கரம் கொண்டு கோவிட் -19 தொற்றுநோயை ஒடுக்கும் அந்நாட்டின் பக்கவிளைவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்களும் வெடிக்கத் தொடங்கிவிட்டன. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையால் அடித்து கொல்லப்படட்ட 22 வயதான பெண் மாசா அமினியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் தெருக்களில் இறங்கியதை ஈரானின் வரலாறு கண்டிருக்கிறது.

வட அமெரிக்காவில், சமூக பழமைவாத சக்திகள் சேர்ந்து, தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன. இதற்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola