சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று, நூற்றாண்டு காலத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது. இந்தியா என்பதில் இருந்து ஒன்றுபட்ட பாரதம் என்ற கருத்தாக்கத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில், இதை முன்வைத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆப் இந்தியா மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
முக்கிய தலைப்பில் பேச உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி:
நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது நாள் மாநாட்டில் சாலை மற்றும் போக்குவரத்து துறைக்கான இந்தியாவின் பார்வை என்ற தலைப்பில் நிதின் கட்கரி பேச உள்ளார்.
நிதின் கட்கரி பசுமை போக்குவரத்தின் தீவிர ஆதரவாளராக உள்ளார். நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக அவர் தனது 'கோ எலக்ட்ரிக்' பிரச்சாரத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 30% மின்சார வாகனங்களை அடைய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கட்காரியின் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதாவாகும். இது சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவைப் பெறுவதற்கான செயல்முறையை மேலும் நெறிப்படுத்துகிறது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட் அல்லது சீட்பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் மசோதா உறுதி செய்கிறது.
கூடுதலாக, உயிரி எரிபொருள் மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளார். மேலும், 2025 ஆம் ஆண்டளவில் பெட்ரோலில் 20% எத்தனால் மற்றும் டீசலில் 5% கலப்பதை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஐடியாஸ் ஆஃப் இந்தியா:
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் (பிப்ரவரி 24) பெரும் எதிர்பார்ப்பு ஏற்பாடுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் "புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் பிப்ரவரி 24-25 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில், உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், 'புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது' என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.