தமிழ்நாடு:


1. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களுக்கும்  'ரெட் அலர்ட்' எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 


2. கோயம்பேடு சந்தையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விலை தற்போது ரூ.80 ஆக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்தியா:


1.மேகலாயாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 சட்டமன்ற அதிருப்தி உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். இதன்மூலம், ஒரே நாள் இரவில் மேகலாயவின் சட்டமன்ற எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உருவாகிறது.


2. கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த 21 வயதான மோபியா என்பவர், வரதட்சணை என்னும் கொடுமையால் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தற்கொலை கடிதத்தில் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குற்றம்:


1. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கெளதம் என்பவர், தனது நண்பர்களுடன் இணைந்து நடன பெண் ஒருவரை வாடகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பெண் அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். இலங்கை தூதரகம் அருகே சென்ற போது, இளம் பெண்ணின் கூச்சல் அதிகமானது. இதனால் ஆத்திரமடைந்த கெளதம் உள்ளிட்ட நண்பர்கள், செருப்பால் அந்த இளம் பெண்ணை அடித்துள்ளனர். இதற்கிடையில் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் அங்கு வந்து இளம் பெண்ணை மீட்டனர்.


2.புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்கின்ற உள்ள குள்ளா (23) என்ற நபரின் மாமியார் ஈஸ்வரி. மணிவண்ணன் இருக்கும் அதே பகுதியில் வசித்து வருவதாகவும் மணிவண்ணன் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று இருவரும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ்  மணிவண்ணனை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


3.கடந்த 19ம் தேதி தனியார் பள்ளியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்றும் 11ஆம் வகுப்பு கணித ஆசிரியர் நேற்று மாலை மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


சினிமா:


1. நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லை எனவும் திரையுலகத்தினர் உதவ வேண்டுமெனவும் அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து சோனு சூட் சிவசங்கரின் சிகிச்சைக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.


Maanaadu :


2. படத்தின் தொடக்கத்தில் இருந்தே இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் வலிகளை வார்த்தைகளாக, வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. படத்தில் அப்துல் காலிக் என்ற இசுலாமியராக நடித்திருப்பார் சிம்பு. பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.


3. சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடியை தாண்டி வசுல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


விளையாட்டு:


1.நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும், ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். 


2.மேற்கிந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண