தமிழ்நாடு:
1. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் கொரோனாவால் இறந்தவர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இறந்தவர்களில் 1675 பேர் தடுப்பூசி போடவில்லை எனவும், கொரோனா தடுப்பூசி போடாத நபர்களில் சுமார் 83 சதவிகிதம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
2. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆட்டு திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மரணமடைந்த போலீசார் குடும்பத்திற்கு ரூ1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி வருகின்ற நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
4. ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இடம் பெற்றுள்ளதாக கண்டித்து, நடிகர் சூர்யா அவரது மனைவியும், நடிகருமான ஜோதிகா மற்றும் பட இயக்குநர் ஆகியோர் வன்னியர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம் என்று ஆரணி பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
1. ஜம்மூ காஷ்மீர் மாவட்டம் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை தெற்கு காஷ்மீர் பகுதியில்அடையாளம் தெரியாத பயங்கரவாத நபர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் தாக்குதல் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்டதாகவும், பள்ளி மாணவர்கள் 60 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
2. சத்தீஸ்கரில் 23 மாத குழந்தை சிருஷ்டி ராணி அதே அரிய மரபணு நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபியால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சிகிச்சைக்கான ரூ.16 கோடியை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.
சினிமா:
1. தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ஜெய்பீம் படம் சர்ச்சைக்கு நானே பொறுப்பு என்றும் இயக்குநர் ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.
2. லூசிபர் படத்தில் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க நயன்தாராவிற்கு ரூபாய் 4 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3. பாலா, சூர்யா இணையும் படத்தில் அவர் டபுள் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
1. உலகப்புகழ் பெற்ற கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. சீன அரசியல் தலைவர் ஜங்கயோலி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் மாயமான டென்னிஸ் வீராங்கனை பெங்ஷூவாய் வீடியோவில் தோன்றும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம்:
1.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள San Diego எனும் நகரில் இருந்து Federal Deposit Insurance Corporation எனும் காப்பீட்டு முகமைக்கு கொண்டு சென்ற பொது டிரக்கின் பின்பகுதி கதவு திறந்து பணக் கட்டுகள் அப்படியே காற்றில் பறந்து சென்றது. இதற்கிடையே, பணத்தை அள்ளிச்சென்ற மக்கள் முறையாக மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை காவல்துறை எச்சரித்துள்ளது.
குற்றம்:
1.சென்னை மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நாகராஜுக்கு சில நாள்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக நாகராஜ் தனது மனைவி லட்சுமியிடம் வீட்டின் தோட்டத்தில் தன்னை புதைத்துவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கியுள்ளார். சத்தியத்தை மீற முடியாத லட்சுமி, கணவர் விருப்பப்படி தோட்டத்தில் உடலை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. கேரள மாடல்கள் மரணத்தில் திடீர் திருப்பமாக மாடல்கள் இருவரும் அருந்திய குளிர்பானத்தில் அவர்களுக்குத் தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகவும்.அது தெரியாமல் கார் ஓட்டிச் சென்றதால்தான் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள காவல்துறைக்கு வந்த எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்