தமிழ்நாடு:
- கோவை பள்ளி மாணவி தற்கொலை குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
- கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
- முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் அணையை எட்டியதால் வல்லக்கடவு, வண்டிபெரியாறு ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
- உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாட்டு அரசு அறிவிப்பு. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்திட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்தியா:
- கொரோனா பெருந்தொற்று முதல் அலை காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவிகிதம் வரை அதிகரித்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சினிமா:
- போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள சபாபதி திரைப்பட போஸ்டரை திரும்பப் பெறவில்லை எனில், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக அமைப்பு அறிவித்துள்ளது.
- முன்னணி நாயகியான சமந்தா தெலுங்கு படமான புஷ்பாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமந்தா ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
- நடிகர் சிம்பு,தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படத்தை பகிர்ந்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “விரைவில் இசை” என குறிப்பிட்டுள்ளார். யுவனின் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் சிம்பு இணைந்து ஒரு பாடல் பாடியிருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
விளையாட்டு:
- துபாயில் நேற்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டி-20 உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
- ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் ஃபார்மிற்கு திரும்பியது தான், இறுதிப்போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்நிலையில், ‛Out of form, too old and slow!’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கேண்டீஸ் வார்னர், தன்னுடைய வாழ்த்துக்களை தன் கணவருக்கு தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோஹிப் அக்தார், வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது, நியாயமற்ற முடிவு என்றும், தங்கள் நாட்டு வீரரான பாபருக்கு தான் அது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
- ‛நான் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான்...’ வீல் சேருக்கு மாறிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸ் உருக்கம்
உலகம்:
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளது. விபத்தில் எத்தனை பேருக்கு காயம், அல்லது எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
குற்றம்:
- அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்திலே கடன் தொல்லையால் காவலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையின் மீஞ்சூர், பூந்தமல்லி என இரு வேறு பகுதிகளில் மனைவிகளை தாலிக்கயிற்றால் கழுத்தை நெரித்து கணவன்மார்களே கொலை செய்த சம்பவத்தால் அந்தந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- திருவாரூரில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் இளைஞரின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்னாலஜி:
- பட்ஜெட் போன்களுக்கு பிரபலமான ரெட்மி தன்னுடைய அடுத்த மாடலை சந்தையில் களமிறக்கவுள்ளது. Redmi Note 11T 5G India மாடல் வரும் 30 தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது. சீனாவில் கடந்த மாதம் இந்த மாடல் வெளியான நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ32 வகை ஃபோன் விரைவில் அறிமுகமாக உள்ளது. 8 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜூடன் இந்த ஃபோன் அறிமுகமாக இருக்கிறது.
- விரைவில் கூகுள் நிறுவனத்தின் மெசேஜிங் செயலியில், திறக்கப்படாத மெசேஜ்களை ஹைலைட் செய்து காட்டும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்