நூற்றாண்டை கொண்டாடும் இந்தியாவின் தலைசிறந்த பாரம்பரிய செய்தி நிறுவனமான ஏபிபி குழுமம், நம்பகத்தன்மையான செய்திகளுக்காக மக்களால் அறியப்படுகிறது. பல்வேறு சிறப்புகளையும், விருதுகளையும் தொடர்ந்து பெற்று வரும் ஏபிபி குழுமத்திற்கு மேலும் ஒரு சிறப்பான பெருமை கிடைத்துள்ளது. 


E4M Indian Marketing Awards விழாவில், 6 விருதுகளை வாங்கி குவித்துள்ளது ஏபிபி குழுமம். இதில், தமிழ் மொழிக்கான சிறப்பாக, ஏபிபி குழுமத்தின் தமிழ் பதிப்பான ‛ஏபிபி நாடு’ , 4 விருதுகளை பெற்றுள்ளது. தென்னிந்திய அளவில் வழங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழால், ஏபிபி நாடு 4 விருதுகளை தன் வசமாக்கியது. அதே போல், தெலுங்கு பதிப்பான ‛ஏபிபி தேசம்’ 2 விருதுகளை தன்வசமாக்கியுள்ளது 






ABP நாடு பெற்ற விருதுகள்!


வெளியான மிகக்குறைந்த நாட்களில் அதிக வாசகர்களையும், நன்மதிப்பையும் பெற்ற ஏபிபி நாடு டிஜிட்டல் தளம், E4M Indian Marketing விருதுகளில் 4 முக்கிய விருதுகளை தன்வசமாக்கி சாதனை படைத்துள்ளது. 



  • ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்கான(Best Marketing Campaign of the Year) விருது

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங்/சமூக ஊடகம் மற்றும் ஊடகத்திற்கான சிறந்த பயன்பாட்டிற்கான விருது(Best use of Digital Marketing/ Social Media - Media)

  • பிராண்ட் நீட்டிப்பு - மீடியாவிற்கான விருது(Brand Extension - Media) 

  • அச்சு ஊடகத்தின் சிறந்த பயன்பாட்டிற்கான விருது(Best use of Print - Media)


ஆகிய நான்கு பிரிவுகளில் அறிமுக ஊடகமான ஏபிபி நாடு விருதுகளை பெற்றுள்ளது. அதே போல, ஏபிபி குழுமத்தின் தெலுங்கு பதிப்பான ஏபிபி தேசம், இரு விருதுகளை பெற்றுள்ளது. இதோ அவற்றின் விபரம்: 



  • டிஜிட்டல் மார்க்கெட்டிங்/சமூக ஊடகம் மற்றும் ஊடகத்திற்கான சிறந்த பயன்பாட்டிற்கான விருது(Best use of Digital Marketing/ Social Media - Media)

  • சிறந்த வானொலி பயன்பாட்டிற்கான விருது(Best use of Radio)


ஆகிய இரு விருதுகளை பெற்றுள்ளது ஏபிபி தேசம். ஏபிபி நெட்வொர்க் நிறுவனத்தின் இரு தொடக்க ஊடகங்களும் தென்னிந்தியாவின் விருதுகளை பெரும் அளவில் பகிர்ந்துள்ள நிலையில், ஏபிபி நாடு அதிகபட்ச விருதுகளை பெற்றிருப்பதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். குழுமத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.