காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

உள்ளூர் முதல் உலகம் வரையிலான முக்கியச் செய்திகளை சுருக்கமாக இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.    

Continues below advertisement

1. தமிழகம் முழுவதும் தற்போது உள்ள முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.    

 

2. கொரோனா மருத்துவப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு க ஸ்டாலின், இன்றும் நாளையும்  ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பயணம் செல்கிறார்.

3. தமிழகத்தில் மியூகார்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில், 13 மேற்கொண்ட பணிக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4. பாலியல் சர்சை காரணமாக வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்ய ஒ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது.

5. தேசிய தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் கீழ், 20.57 கோடி டோஸ்கள் இது வரை வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1.86 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதே சமயம், 2,59,459 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து  குணமடைந்தனர் . 

6. மே 28 காலை நிலவரப்படி, 2,76,66,860 தடுப்பு மருந்து டோஸ்களை பாரத் பயோடெக் வழங்கியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்தது. இதில், 2,,20,89,880 டோஸ்கள் (வீணானவை உட்பட) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் தற்போது 55,76,980 டோஸ்கள் உள்ளன. இதே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் 13,65,760 டோஸ்கள் கோவேக்சினை பெற்றன.  முன்னதாக, பாரத் பயோடெக்கிடம் ஆறு கோடி டோஸ்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள்  தவறானவை என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.  


 

7. சரக்கு மற்றும் சேவை வரிக் குழுமத்தின் 43-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக  நேற்று நடைபெற்றது. கொரோனா தொடர்பான சர்வதேச நிவாரண பொருட்களின் இறக்குமதிகளுக்கு ஐஜிஎஸ்டியில் இருந்து 2021 ஆகஸ்ட் 31 வரை விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 


8. உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதுவரை 18,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்,19,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,19 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள்,15,000 வென்டிலேட்டர்களை கொரோனா நிவாரணப் பொருட்களாக அனுப்பி வைத்துள்ளன.    
 

9. கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள், இறப்பு விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று  சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார்.  

10. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola