பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப் புலி ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 1950 ம் ஆண்டு பின்னர் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. எனவே இந்த உயிரினத்தை மீட்டு எடுக்கும் விதமாக ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு 5 பெண் சிவிங்கி புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கி புலிகளின் கால் தடங்கள் இந்திய காடுகளில் பதிந்தன. 


இந்தநிலையில் கடந்த மாதம் 17ம் தேதி இந்த சிவிங்கி புலிகளுக்கு பிரதமர் மோடி இந்திய பாரம்பரிய முறைப்படி பெயர் வைத்தார். அந்த புலிகளின் ஒன்றுதான் ஆஷா. அவற்றை மத்தியப்பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில்  பிரதமர் மோடி கூண்டிலிருந்து விடுவித்தார். இவற்றில் பெண் சிவிங்கி புலி ஒன்றுக்கு 'ஆஷா' என பெயர் சூட்டிய பிரதமர் மோடி, மற்ற சிவிங்கிப் புலிகளுக்கும் இந்திய பெயர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.


இந்நிலையில், மோடி பெயர் சூட்டிய ஆஷா கர்ப்பமாக இருப்பதாக குனோ உயிரியில் பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் செயல்பாடுகள், பழக்கவழக்கம், ஹார்மோன்கள் ஆகியவை கர்ப்பமாக இருப்பதாக அறிகுறிகளை காட்டுவதாகவும், இதை இம்மாத இறுதியில்தான் உறுதிபடுத்த முடியும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.






இது குறித்து சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் லவுரி மார்க்கர் அளித்த பேட்டியில், "ஆஷா கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் முதல் சிவிங்கிப் புலி குட்டியை அது பிரசவிக்கும். நமீபியாவிலிருந்து கொண்டு வரும்போதே இந்த சிவிங்கிப் புலி கர்ப்பமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த சிவிங்கி தனியாக வைக்கப்பட்டுள்ளது. அதன் இருப்பிடத்தில் சிறிய குடிசை அமைக்கப்படும்" என்றார். 


இருப்பினும், குனோ தேசிய பூங்காவின் அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா இந்த செய்தியை மறுத்துள்ளார். “பெண் சிறுத்தை கர்ப்பமாக உள்ளது என்ற செய்தி தவறானது. நமீபியாவில் இருந்து எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை மற்றும் கர்ப்ப அறிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த செய்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை,'' என்றார்.






ஆஷாவை தவிர ஃப்ரெடி, எல்டன் மற்றும் ஓபன் என்ற 3 ஆண் சிறுத்தைகளும், சியாயா, சாஷா, திபிலிசி மற்றும் சவன்னா என்ற நான்கு பெண்களும் அதே நாளில் நமீபியாவிலிருந்து வந்தன