தமிழ்நாடு :
- பள்ளிக் கல்வித்துறையில் டிஇஓக்கள் எனப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 98 பேர் புதிய அலுவலகங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலவச பயணசீட்டு விவகாரத்தில் மூதாட்டி மீது வழக்குப்பதிவு இல்லை; அதிமுகவை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
- முன்னாள் பாஜக தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான இல. கணேசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் நூதனமான தரையை துடைக்கும் மாப்பிற்குள் கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் லாவகமாக கைப்பற்றியுள்ளனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர்கோவில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் தீவிபத்து - புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் எரிந்து சேதம்
- தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11 ம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கில் நடைபெறும் : 9 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
- நாம் ஒரே கொள்கை உடையவர்கள் என்பதால் தான் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துள்ளோம் - கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்.
இந்தியா:
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்வாகியுள்ளது.
- காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே, அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- செப்டம்பர் மாதம் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: கடந்த ஆண்டை விட 26% அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சகம் தகவல்
- இனி உங்களின் தரவுகளை நிறுவனங்கள் சேமிக்க இயலாது ; நேற்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி
உலகம்:
- தாய்லாந்து புக்கட் தீவில் 2 ஆண்டுகளுக்குப்பின் சைவத்திருவிழா - முகங்களில் பெரிய வாள், கத்திகளை குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
- புளோரிடாவை தொடர்ந்து தெற்கு கரோலினாவை தாக்கிய இயான் சூறாவளியால் 17 பேர் உயிரிழந்ததாக தகவல்
- அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை, வெள்ளை மாளிகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்து பேசினார்.
- இயான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணியை அமெரிக்க கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது.
விளையாட்டு:
- மகளிர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
- சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார்.