மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி, பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை உள்ளது.


மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண், புகைப்படங்கள் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை மாற்ற விரும்பினால் அதற்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இதுவரை புதுப்பிக்கப்படாத நபர்கள் தங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரி சான்றிதழ்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டையை அப்டேட் செய்வது எப்படி?



  • ஆதார் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI உள்ளே செல்ல வேண்டும்.

  • உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் ஒரு முறை மட்டுமே உள்ளே செல்லும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.

  • உங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி. தேவையான அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றவும்.

  • உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.


ஆதார் அட்டையில் மேற்கண்ட தகவல்களை இணையத்தின் வழியில் புதுப்பித்துக் கொண்டாலும் கருவிழி ஸ்கேன், கைரேகைகள் மற்றும் முக புகைப்படங்கள் போன்ற முக்கியமான தகவல்களை இணைய வழி மூலமாக புதுப்பிக்க இயலாது.


மேலும், ஆதார் அட்டையில் உள்ள பாலின விவரம் குறித்து ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். இந்த சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி?



  • ஆதார் இணையதளமான UIDAI இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.

  • பின்னர், அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • பின்னர் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.

  • அங்கே உங்கள் நேரடி புகைப்படம் எடுக்கப்படும்.

  • பின்னர், புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

  • இந்த எண் மூலமாக நீங்கள் உங்கள் ஆதார் அட்டை அப்டேட் நிலவரத்த அறிந்து கொள்ளலாம்.


நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும், வங்கிகளில் வங்கிக்கணக்குள் தொடங்குவதற்கும் ஆதார் அட்டை மிக மிக அவசியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.