ரிவர்ஸில் ஆட்டோவை வேகமாக ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, சங்கமேஸ்வர் யாத்திரையை முன்னிட்டு இப்படி போட்டி நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


ரிவர்ஸில் ஆட்டோ


ஆட்டோ, பைக், காரில் பலர் ஸ்டண்ட் செய்து பார்த்திருப்போம், பைக்கின் முன் வீலை தூக்கிக்கொண்டு ஓட்டுபவர்கள், வேகமாக ஓட்டுபவர்கள், வேகமாக சென்று காரை பார்க் செய்பவர்கள் என்று பலரை நேரிலும் வீடியோக்களிலும் கொண்டிருப்போம். அதுபோல ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ரிவர்ஸ் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதில் பங்கேற்றவர்கள் ஆட்டோ ரிக்ஷாவை ரிவர்ஸில் வேகமாக ஓட்டி செல்வதை வீடியோவில் காணமுடிகிறது.



ரிவர்ஸ் ஆட்டோ ஓட்டும் போட்டி


நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் இந்த ஸ்டண்ட்டை செய்கிறார். மகாராஷ்டிராவில் சங்கமேஷ்வர் யாத்திரையை முன்னிட்டு, சாங்லி நகருக்கு அருகிலுள்ள ஹரிபூர் கிராமத்தில் ரிவர்ஸ் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை காண நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.


தொடர்புடைய செய்திகள்: Video: திமுக தொண்டர் மீது கல்லைத் தூக்கி வீசிய அமைச்சர் நாசர்.. குவியும் கண்டனங்கள்.. விமர்சனங்களை பெறும் வீடியோ..


பரபரப்பாக பேசப்பட்ட போட்டி


போட்டியின் சிறப்பம்சமாக ஆட்டோவை ரிவர்ஸில் வேகமாக ஒட்டி செல்வது போட்டியாக இருந்தது. வித்யாசமான இந்த ஆட்டோ ரிக்ஷா போட்டியை காண மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்பட்டது. நாட்டின் பல்வேறு மூலைகளிலும் விநோதமான போட்டிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ரிவர்ஸ் ஆட்டோ ரிக்ஷா போட்டி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 






திரண்ட மக்கள்


போட்டியின் போது, ​​நூற்றுக்கணக்கானோர் தங்கள் மொபைலில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட போட்டியில் விபத்து இல்லாமலா, இந்த போட்டியிலும் ஒரு விபத்து நடந்தது. ஆட்டோ ரிக்‌ஷாவை ரிவர்ஸில் ஓட்டிச் சென்றபோது, ​​ஒரு ஆட்டோ ரிக்‌ஷா சமநிலையை இழந்து, கவிழ்ந்ததையும் வீடியோவில் காணமுடிகிறது. இந்த வித்தியாசமான போட்டியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இது தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பவம் சாங்லி நகருக்கு அருகில் உள்ள ஹரிப்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த போட்டி வேடிக்கைக்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. சாலையில் அல்லது எங்கும் இதுபோன்ற வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.