காதலுக்காக பாலினத்தை மாற்றிக்கொண்ட இளம்பெண்.. கடைசியில் காதலி கொடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்..

உத்தர பிரதேசத்தில் தோழிக்காக பாலின அறுவை சிகிச்சை செய்து பெண் ஒருவர், ஆணாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Uttar Pradesh : உத்தர பிரதேசத்தில் தோழிக்காக பாலின அறுவை சிகிச்சை செய்து பெண் ஒருவர், ஆணாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனல். இவர்  தனது பெற்றோருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள மேல்தளத்தை வாடக்கை விட முடிவு செய்தார். அப்போது குஜராத்தை சேர்ந்த சனா அந்த பகுதியில ஒரு அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது சோனல் வீட்டின் மேல்மாடியில் கடந்த 2016ஆம் ஆண்டு வாடைகைக்கு வந்து தங்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.  

இந்த பழக்கம் அடுத்த நான்கு மாதங்களுக்குள் அவர்களை நெருங்கிய தோழியாக மாற்றியது. மேலும், இருவரும் ஓரினச்சேர்க்கை  உறவில் இணைந்திருந்தனர். இதுபற்றி சோனலின் குடும்பத்திற்கு தெரியவந்தது. பின்னர், சோனலின் காதலியான சனாவை அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். இதற்கிடையில் சனாவுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து சனா கடந்த 2017ஆம் ஆண்டு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கு சென்றார் சனா.

இதனை அடுத்து, சோனல் தனது குடும்பத்தினர் சனாவுடம் வாழ உள்ளதாக கூறி, அடுத்த நான்கு நாட்களில் சனா தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார். இருவரும் அங்கு ஒன்றாக உறவில் இருந்துள்ளனர். பின்பு, இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கணவன் மனைவி போல் இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இதுபோன்று இருந்தால் சமூகம் தவறாக பேசும் என்று எண்ணி, சனா ஆணாக மாற முடிவு செய்தார்.

இதனை அடுத்து அவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாலியன மாற்ற அறுவை சிகிச்சை செய்ய சென்றனர். அங்கு சோனாலுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிகிச்சைக்கு தொடர்பான ஆவணங்களில் சோனலின் மனைவி என்று சோனால் கையெழுத்திட்டார்.

பின்பு, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சனா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிக் கொண்டார். மேலும் தனது பெயரை சோனைகல் என்றும் மாற்றிக் சோனைகல் என்று மாற்றிக் கொண்டார். பின்பு, இருவரும் கணவன் மனைவியாக வாழ தொடங்கினர். சனா வேலைக்கு செல்வதால் தானும்  வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தால் சோனல்.

சிறிது நாட்கள் கழித்து சனாவை கண்டுக் கொள்ளாமல் சோனா இருந்துள்ளார். இதைப் பற்றி சனா கேட்கும்போதெல்லாம் சண்டை ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் பணியாற்றி வந்த சோனலுக்கு அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் கியான் என்ற நபருடன் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட சனா அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சனாலை விட்டு தான் காதலித்து வந்த நபருடன் சோனல் சென்றார். சனா பிரச்சனை செய்வார் என்று எண்ணி புகார் அளித்தார் சோனல்.

இதுதொடர்பாக சனா தனக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சோனல் வரவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கடந்த 18ஆம் தேதி போலீசார் சோனலை கைது செய்தனர். விசாரணையில் கியான் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதால் சனாவை விட்டுச் சென்றாக தெரிவித்தார். பின்னர், சோனலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது-

Continues below advertisement