உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹரின் பிபிநகர் பகுதியில் வழிதவறி வந்த காளை காதுகேளாத பெண்ணை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


காளை தாக்கி உயிரிழப்பு


உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹரின் மாவட்டத்தில் காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் ஸ்மீவ காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு காது கேளாத மாற்று திறனாளி பெண்ணை காளை ஒன்று குத்திக் கொன்ற சம்பவம் ஊர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட சசிபாலா என்னும் பெண்ணுக்கு 34 வயது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டின் அருகில் ஒரு பண்ணைக்குச் சென்றதாகவும், சனிக்கிழமையன்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியில் சென்றவர் திரும்பி வருவார் என்று காத்திருந்து பார்த்த குடும்பத்தினர் பயந்து ஊர் முழுவதும் தேடி உள்ளனர்.



சடலமாக மீட்பு


எங்கும் தேடி கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடிச் அருகில் உள்ள வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். வயலில் ரத்த வெள்ளத்தில் சடலாமாக கிடந்துள்ளார் சசிபாலா. அந்த இடத்தில் மாட்டு சாணம் ஆகியவை காணப்பட்டன என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்: இன்ஸ்டா மூலம் வலை... சிக்கிய 16 வயது சிறுமி... வேலையை காட்டிய இளைஞர்...! புகாரில் இருப்பது இதுதான்!


காவல்துறை தகவல்


இதுகுறித்து காவல் நிலையப் பொறுப்பாளர் ஜிதேந்திர குமார் சிங் கூறுகையில், அந்த இடத்தில் ரத்தம், குளம்பு தடிப்புகள், மாட்டுச் சாணம் இருந்ததால், காளை தாக்கியதால் உயிரிழந்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி இறந்த பெண்ணின் தலையில் காயமும் உள்ளது', என்று குறிப்பிட்டார். மாவட்டத்திலும் அடிக்கடி காளை தாக்குதலால் உயிழப்புகள் நடைபெறுவதால் இவரையும் காளைதான் தாக்கி இருக்கும் என்று முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.



தொடர்ச்சியாக காளை தாக்குதல்


இந்த மாவட்டத்தில் காளைகள் தாக்கி இறந்த சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. செப்டம்பர் 4 ஆம் தேதி, 40 வயது விவசாயி ராம்வீர் சிங், வயல்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காளையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். மே 1 ஆம் தேதி, குலாவதி பகுதியில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதான மயங்க் ரின்கு என்பவரும் வழிதவறிச் சென்ற காளையின் தாக்குதலால் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 20 அன்று, அகமதுகர் பகுதியில் உள்ள பத்புரா கிராமத்தில் வசிக்கும் 65 வயதான ஜெய்பிரகாஷ் மீனா, காளை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த மாவட்டத்தில் காளைகள் தாக்குதலால் உயிரிழப்புகள் நடைபெற்று வருவதால் மக்கள் வெளியில் செல்லவும், வயலுக்கு வேலைக்கு செல்லவும் அஞ்சி வருகின்றனர். ஒரு சிலர் காளைதான் கொல்கிறதா என்கிற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண