கொல்கத்தாவில் மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து நோயாளி ஒருவர் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் அருகில் இருந்து அவர்களை கவனித்துக் கொள்ள குடும்ப நபர்கள் இருப்பது வழக்கம். ஆனால் அவர்களையும் மீறி மன அழுத்தத்தில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் சில நேரத்தில் விபரீதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். இதனை தடுக்க மருத்துவமனைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. ஆனாலும் சோக சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றது.
அந்த வகையில் கொல்கத்தாவில் மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து நோயாளி ஒருவர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நகரின் மத்தியில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெயர் குறிப்பிடாத நோய் ஒன்றுக்கு அம்மருத்துவமனையின் 7வது மாடியில் உள்ள வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த சுஜித் ஆதிகாரி என்ற நோயாளி அக்கட்டடத்தின் வெளிப்பக்கத்திற்கு திடீரென சென்று ஒரு கார்னரில் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்து போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு படையினருடன் சேர்ந்து அவரை மீட்கும் முயற்சியில் களமிறங்கினர். சுஜித் ஆதிகாரி கீழே இறக்குவதற்கு ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்த முயற்சித்த போது அவர் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மீட்பு குழுவினர் திணறினர்.
ஆனால் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்ற நிலையில் அவரை பிடிக்க வலை விரிக்கப்பட்டது. மேலும் ஆஜித்தை வந்த பாதையில் மீண்டும் மருத்துவமனைக்குள் செல்லுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆஜித் சிறிது நேரத்தில் கீழே இறங்க முயற்சித்த போது யாரும் எதிர்பாராத விதமாக ஆஜித் கால் வழுக்கி மேலிருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு மண்டை ஓடு, விலா எலும்பு மற்றும் இடது கையில் காயங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்