முட்டையை ஏன் அதிகமாக வேக வைத்தீர்கள் எனக் கேள்வி கேட்ட ரெஸ்டாரண்ட் முதலாளி அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஜெய்ப்பூரின் கல்வார் பகுதியில் ஹமிர்சிங் என்பவர் ரெஸ்டாரண்ட் நடித்தி வந்துள்ளார். அவரது ரெஸ்டாரண்டில் சுனில் மற்றும் பப்லு என்ற சகோதரர்கள் இருவர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரெஸ்டாரண்டில் சகோதரர்கள் இருவரும் எக் புர்ஜி என்ற முட்டை பொடிமாஸை சமைத்துள்ளனர். 


முட்டை பொடிமாஸ் அதிகமாக வேகவைக்கப்பட்டதால் ஹமிர் சிங் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், சுனில் மற்றும் பப்லுவிடம் ஏன் முட்டையை அதிகமாக வேக வைத்தீர்கள் என்று ஹமிர் சிங் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் ஹமிர் சிங்கை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். 


இருவரும் தாக்கியதில் படு காயமடைந்த ஹமிர் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதும் ஹமிர் சிங் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய சகோதரர்கள் இருவரையும் போலீசார் தேடினர். முட்டையை அதிகமாக வேக வைத்ததில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் திருப்பி தராமல், ஊழியர்களை தாக்குவது, தகராறில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவம் அடிக்கடி அரங்கேறுவது வழக்கம். பிரியாணி சாப்பிட்டு காசு தராமல் ஹோட்டல் ஊழியர்களை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இருந்தது.


இரவு நேரங்களில் தாமதமாக ஹோட்டலுக்கு வரும் சிலர் தகராறில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், முட்டையை ஏன் அதிகமாக வேக வைத்தாய் என கேள்வி கேட்ட உரிமையாளரை, ஹோட்டல் பணியாளர்கள் அடித்தே கொன்றது அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். முட்டைக்காக இத்தனை அக்கப்போரா என நெட்டிசன்ஸ் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  


மேலும் படிக்க: அய்யய்யோ.. மனைவியை கொலை செய்துவிட்டு உதவி காவல் ஆணையர் தற்கொலை - நடந்தது என்ன?


நெகிழ்ச்சி... மகளின் முதல் மாதவிடாய்; கேக் வெட்டிக் கொண்டாடிய தந்தை!