உத்தரப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் வேலை செய்யும் தம்பதியினர், அதன் உரிமையாளரை பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் என்ன நடந்தது எனப் பார்க்கலாம். 

Continues below advertisement

இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளது. அங்கு ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர் என்ற 70 வயது நபர் தனது 27 வயது மகள் ரஷ்மியுடன் வசித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஓம் பிரகாஷின் மனைவி காலமானார். இப்படியான நிலையில் அப்போது ரஷ்மி சிறுமி என்பதால் தனியாக வைத்துக் கொண்டு ஓம் பிரகாஷ் மிகுந்த சிரமம் கொண்டுள்ளார். 

அவருக்கு சமைக்கவும் தெரியாததால் தங்கள் இருவரையும் கவனித்துக் கொள்ள ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி என்ற தம்பதியினரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியினர் முதலில் பரிதாபத்தின் பேரில் உதவி செய்ய உள்ளே வந்தனர். ஆனால் படிப்படியாக அந்த வீட்டில் அதிகாரம் செய்ய தொடங்கினர். ஓம் பிரகாஷ் மற்றும் ரஷ்மிக்கு உதவ அவர்கள் வீட்டின் மாடியில் வசித்திருக்கின்றனர். 

Continues below advertisement

தொடர்ந்து ஓம் பிரகாஷ் முதுமையை எட்டிய நிலையில் அவரையும், மகள் ரஷ்மியையும் வீட்டின் கீழே ஒரு அறையில் அடைத்து வந்தனர். ஓம் பிரகாஷுக்கும் ரஷ்மிக்கும் சரியான உணவு மற்றும் பராமரிப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் காண யாராவது குடும்ப உறவினர்கள் வந்தால் அவர்கள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறி திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் டிசம்பர் 29ம் தேதி ஓம் பிரகாஷ் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓம் பிரகாஷின் சகோதரர் அமர் சிங் பிரகாஷ் கண்ட காட்சி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதாவது மரணமடைந்த ஓம் பிரகாஷ் எலும்புக்கூடான நிலையிலும், ரஷ்மியும் அதே நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்துள்ளார். ஓம் பிரகாஷின் உடல் கடுமையாக மெலிந்த நிலையில் இருந்தது. அதேசமயம் ரஷ்மி நிர்வாணமாகவும், எலும்புக்கூடு நிலையில் ஒரு இருண்ட அறையில் காணப்பட்டார். 

அவர் பசியின் கொடுமையால் பாதிக்கப்பட்டு ஒரு 80 வயது மூதாட்டி போல காட்சியளித்தார். அவரின் உடலில் சதை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. குஷ்வாஹா மற்றும் அவரது மனைவியின் சொத்து மற்றும் வங்கி சேமிப்பு மீதான பேராசையே இருவரும் இப்படி இருக்கக் காரணம் என அமர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு ச்செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.