மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நேற்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது புல்லட் ஓட்டிய ராகுல் காந்தியின் வீடியோ மிகவும் வைரலாகி வந்த நிலையில், இன்று இந்த யாத்திரையில் சிறுது தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் பாரத் ஜோடோ யாத்திரை பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் நுழைந்தது. உஜ்ஜனியை நோக்கி இந்தூரில் இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி சைக்கிலில் பயணம் மேற்கொண்டார்.






 


மத்தியப்பிரதேசத்தில் இது 6வது நாள் யாத்திரை. முன்னதாக அம்பேத்கரின் பிறந்த ஊரான மோவ் நகரில் ராகுல் தங்கியிருந்தார். நேற்று காலை அங்கிருந்து இந்தூர் நோக்கி புறப்பட்டார். அப்போது அவர் சிறிது தூரம் புல்லட்டில் பயணித்தார். இந்தூர் வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.


மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.. 60  நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மத்திய பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் நுழைந்த ராகுல்காந்திக்கும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான  தொண்டர்களுக்கும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  


காங்கிரஸின் வெகுஜன தொடர்பு முயற்சியான இந்த யாத்திரை,  மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைந்தது. மேலும் மத்திய பிரதேசத்தில்  கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா வழியாகச் சுமார் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைகிறது.


விவசாயிகளின் சோக முகங்களையும் கொப்புளங்கள் நிறைந்த கைகளையும் சேனல்களில் பார்க்க முடியாது...ராகுல் காந்தி உருக்கம்..!