UNGA President On India: இந்திய அரசின் விவசாயிகளுக்கான நலன்கள் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் ஐ.நா.சபையில் பாராட்டுகள் கிடைத்துள்ளன.


ஐ.நா. சபை நிகழ்ச்சி:


ரோமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கலந்துகொண்டார். அப்பொது உலகளாவிய டிஜிட்டல் தாக்கத்தை பற்றி பேசினார். 


”இந்தியாவில் வறுமை ஒழிப்பு”


நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளாத கிராமப்புற விவசாயிகள் , இப்போது தங்கள் எல்லா பரிவர்த்தனைகளையும் ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்கிறனர். இந்தியாவில் இணைய ஊடுருவல் அதிகமாக இருப்பதால், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் வெறும் ஸ்மார்ட் ஃபோன்கள் உதவியுடன்,  800 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பு இல்லாமல் இருந்த இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் கூட, தற்போது தங்கள் அனைத்து வணிகங்களுக்குமான பரிவர்த்தனைகளை ஸ்மார்ட் மூலம் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பில்களை செலுத்துகிறார்கள் மற்றும் ஆர்டர்களுக்கான கட்டணங்களைப் பெறுகிறார்கள். இந்தியாவில் இணைய ஊடுருவல் அதிகமாக உள்ளது. செல்போனும் அதிகமாக உள்ளது. ஆனால் உலகின் தெற்கின் பல பகுதிகளில் அப்படி இல்லை. எனவே, சமபங்கு கோரிக்கைகள் இருக்க வேண்டும்” என டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.






”தொடரும் பசி, பட்டினி”


தொடர்ந்து பேசுகையில், “டிஜிட்டல் மயமாக்கலுக்கான உலகளாவிய கட்டமைப்பை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆரம்ப கட்டமாக இந்த சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய சில முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மற்றும் அதுதொடர்புடைய நோய்களால் 90 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். கவலையளிக்கும் வகையில், ஒவ்வொரு நிமிடமும், ஆறு குழந்தைகள் பசியால் உயிரிழக்கின்றனர். அதாவது எந்த தவறும் செய்யாத ஆறு அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகின்றன. தற்போது, ​​800 மில்லியன் தனிநபர்களுக்கு தங்களுக்கான அடுத்த வேலை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது.


உண்மையில், 2030 ஆம் ஆண்டளவில், நிலையான வளர்ச்சி இலக்குகளை வழங்க நாங்கள் தைரியமாக உறுதியளித்தோம் மற்றும் உலக மக்கள்தொகை 8.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இப்போது தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிட்டால், 600 மில்லியன் மக்கள் இன்னும் பசியை எதிர்கொள்வார்கள்” எனவும் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.