நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத்தொகை குறித்தும் மேலும் அடுத்த ரவுண்டு அகவிலைப்படி உயர்வுக்காகவும் மத்திய அரசு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
விரைவில் 7-ஆவது சம்பள உயர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் சில முக்கிய முடிவுகளுக்காக மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், இந்த புத்தாண்டில் அவர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான 3 பரிசுகள் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். லெவல்-3 நிலை ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 அகவிலைப்படி உயர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவல்-13 அல்லது லெவல்-14 நிலை ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,15,900 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பொது பட்ஜெட்டுக்கு பிறகு ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3 மடங்கு உயர்த்தப்பட்டால், அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், சம்பளம் 26000 X 3.68 = ரூ.95,680. 3 மடங்கு ஃபிட்மென்ட் ஃபேக்டரை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆக இருக்கும்.
அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு
அதிக பணவீக்க விகிதங்களை அடுத்து, புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். சமீபத்தில், 01.07.2022 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.