நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடே குடியரசு தின கொண்டாட்டத்தால் கோலாகலமாக காணப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண கொடியான தேசிய கொடியை 10.36 மணிககு ஏற்றி மரியாதை செலுத்தினார்.


தேசிய கொடியேற்றிய குடியரசுத்தலைவர்:


அவர் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் பலமிகுந்த முப்டைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். வழக்கமாக காலை வேளையிலே நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி இந்த முறை கடும் பனிமூட்டம் காரணமாக சற்று தாமதம் ஆனது. இந்தியாவின் 75வது குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்றார்.


திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றியபோது, பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் அங்கிருந்தனர். தேசிய கொடியை திரௌபதி முர்மு ஏற்றியபோது பார்வைாளர்கள் மாவத்தில் குவிந்திருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர், முப்படைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


பிரம்மாண்ட அணிவகுப்பு:


அணிவகுப்பில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்று பல சாகசங்களை செய்தனர். குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிய பிறகு, வானில் இருந்து இந்திய ஹெலிகாப்டர்கள் மர். குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியுடன் பறந்து அனைவரையும் வியக்க வைத்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, ராஷ்ட்ரபதி  பவன் முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.


இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங், ஜெய்ஷா, நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் உள்பட மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர். முன்னதாக பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர் நீத்த பாதுகாப்பு வீரர்களுக்கான நினைவு தூணில் மௌன அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரனுடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 10.20 மணியளவில் புறப்பட்டார்.


குடியரசுத் தலைவர், பிரான்ஸ் அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி:


பின்னர், காலை 10.26 மணிக்கு குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் வந்தார். சரியாக 10.33 மணியளவில் குதிரைகள் பூட்டிய வண்டியில் பாரம்பரிய முறைப்படி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார். அவரை பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர். பின்னர், மத்திய அமைச்சர்களை பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.