75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதுமுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை இலவசமாக பார்வையிட அனுமதி மத்திய அரசு அளித்துள்ளது.
இலவச அனுமதி:
நாடு சுதந்திரமடைந்து வரும் 15 ஆம் தேதியன்று, 75வது ஆண்டு நிறைவடையவுள்ளது. அதையொட்டி, 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர வரலாறு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரை தொல்லியல் துறைக்குட்பட்ட சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களை இலவசமாக பார்வையிடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதையொட்டி தாஜ்மஹால், செங்கோட்டை, மாமல்லபுரம் கற்கோயில்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக பார்வையிடலாம்.
ஏற்கனவே, 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15 தேதி வரை, அனைவரது வீடுகளிலும் இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது.
இலவச தடுப்பூசி:
இதற்கு முன்னர், ஜூலை 15 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இலவச பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அதையடுத்து 75 நாடுகளுக்கு நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்திருந்தார்.
Also Read: India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?
Also Read: முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..
Also Read: இரண்டாம் கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்