75th Independence Day 2022:  மத்திய அரசின் சுதந்திர தின கொண்டாட்ட ஆல்பம் பாடலில் தென்னிந்தியாவின் சார்பாக தேசிய விருது பெற்ற  நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் பிரபாஸ் இடம்பெற்றுள்ளனர். 


இந்திய நாடானது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன், தனது 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை கோலாகளமாக கொண்டாடவுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள சினிமா, விளையாட்டு மற்றும் இன்னும் பல துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித் தந்த பல்வேறு ஆளுமைகளைக் கொண்டு, 75வது சுதந்திர தின கொண்டாட்ட சிறப்பு ஆல்பம் பாடலினை தயார் செய்துள்ளது. இந்த ஆல்பம் பாடலானது மொத்தம் 4.23 நிமிட அளவில் உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் சிறப்புகளை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலானது. ஒட்டு மொத்த இந்தியாவையும் சுற்றிக்காட்டும் விதமாக உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை விளக்கும் விதமாக உள்ள இந்த பாடல் இந்தியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 






இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், கலாச்சார அமைச்சகம் ஹர் கர் திரங்கா என்ற சிறப்பு பாடலை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளைத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோவில் சினிமா, விளையாட்டு மற்றும் பல பெரிய ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். பான் இந்திய நட்சத்திரங்கள் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சிறப்பு சுதந்திர தின பாடலில் தென்னிந்தியாவின் பிரதிநிதிகளாக உள்ளனர்.  இந்த ஆல்பம் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ள தென்னிந்தியாவை சேர்ந்த ஒரே ஆண் நடிகர் பிரபாஸ் மட்டுமே.  இந்தியாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்த ஆல்பம் பாடலை பாடியுள்ளார்.  மேலும், வட இந்தியாவைச் சேர்ந்த  அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அனுபம் கெர், ஆஷா போன்ஸ்லே, சோனு நிகம், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், நீரஜ் சோப்ரா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இந்த சுதந்திர தின கொண்டாட்ட சிறப்பு ஆல்பம்  வீடியோவில் உள்ள மற்ற பிரபலங்கள் ஆவர். காணொளியின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசன்னத்தையும் காணலாம். விளையாட்டு, ஏவுகணை ஏவுதல், ராணுவம், உள்ளூரில் வசீகரிக்கும் அழகு வரை இந்தியாவின் ஆன்மா, வலிமை மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காகவே இந்த சுதந்திர தின கொண்டாட்ட சிறப்பு ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. 


 


ஏற்கனவே 75வது சுதந்திர தின கொண்டாட்டமானது இந்த ஆண்டு முழுவதுமே நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் அவ்வப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே 75வது சுதந்திர தின நினைவுத் தூண் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் பிரதமர் மோடி 75வது சுதந்திர தினத்தினை அனைவரும் இன்னும் புத்துணர்வோடு கொண்டாடும் வகையில் அனைவது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படமாக தேசிய கொடியின் படத்தினை வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், மத்திய மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அரசாணைகள் என அனைத்திலும் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இலச்சினை தவறாமல் இடம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.   


 


ஆல்பம் பாடலில் நடித்துள்ள பிரபாஸ் தற்போது இயக்குனர் நாக் அஸ்வினுடன் ப்ராஜெக்ட் கே எனும் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், சன்னி சிங், க்ரிதி சனோன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரும் நடித்துள்ள பான்-இந்திய பெரிய பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்தில் அவர் ராமர் வேடத்தில் நடிக்கவுள்ளார்.  தற்போது நடிகர் பிரசாந்த் நீல் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் சலார் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த மூன்று திட்டங்களை முடித்த பிறகு, பிரபாஸ் சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட்டின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின்,  ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுடன் இணைந்து நடிக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண